திருநாவாய்(மலப்புரம் மாவட்டம், கேரளா) *திருநாவாய் நவமுகுந்தன் கோயில்*
மூலவர்: நாவாய் முகுந்தன் (நாராயணன்)
நின்ற திருக்கோலம்
தாயார்: மலர்மங்கை நாச்சியார் (சிறுதேவி)
திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத் தலத்தில் திருமாலைக் குறித்து 9 யோகிகள் தவம் செய்ததாகவும் அதனால் இந்த தலம் நவ யோகித்தலம் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் நாவாய் தலம் என்றாகி தற்போது திருநாவாய் என்ற ழைக்கப் படுகிறது.
துவாபர யுகத்தில் கிருஷ்ணர் பஞ்சபாண்டவருடன் சேர்ந்து இத் திருத்தலத்தில் பித்ரு பூஜை செய்துள்ளார். ஆடி அமாவாசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு அருகிலுள்ள பாரத புழை நதியில் நீராடி பித்ரு பூஜைகளைச் செய்கின்றனர்.
கீதா ராஜா சென்னை