ஒருவருக்கு அமையக்கூடிய வாழ்க்கைத் துணையானது சொந்தத்தில் அமையுமா, அந்நியத்தில் அமையுமா என்பது திருமண வயதை அடைந்தவர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாகும்.
?ஜென்ம லக்னத்திற்கு களத்திர ஸ்தானமான 7 ஆம் வீடும், களத்திரகாரகன் சுக்கிரனும் சுபகிரக சேர்க்கை, பார்வை மற்றும் சுபநட்சத்திரங்களில் அமையப் பெற்று இருந்தால் மனைவியானவள் நல்ல ஒரு கௌரவமான இடத்திலிருந்து அமைந்து மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டாகும்.
?ஜென்ம லக்னத்திற்கு 7 ஆம் வீடும், சுக்கிரனும் சொந்த பந்தங்களைக் குறிக்கும் கிரகங்களின் சேர்க்கை பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் சொந்தத்தில் திருமணம் நடைபெறக்கூடிய உன்னதமான அமைப்பு உண்டாகும்.
? ஜென்ம லக்னத்திற்கு 9 ஆம் இடம் தந்தை ஸ்தானமாகும். 9 க்கு 9 இடமாக,
5ம் வீடு தந்தை வழி மூதாதையர் பற்றியும் பூர்வ புண்ணியத்தை பற்றியும் குறிப்பிடும் ஸ்தானமாகும்.
ஒருவரின் ஜாதகத்தில் 5,9 இல் சுபகிரகங்கள் அமையப் பெற்று 7 ஆம் அதிபதியும், சுக்கிரனும், சூரியன் சேர்க்கை அல்லது சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் போன்றவற்றில் அமையப் பெற்றோ, 5,9 க்கு அதிபதிகளுடன் 7ம் அதிபதியும். சுக்கிரனும் அமையப் பெற்றோ இருந்தால் திருமணமானது தந்தை
வழி உறவில் அமையும்.
? 7 ஆம் அதிபதி சுபராக இருந்து வளர்பிறை சந்திரன், புதன் சேர்க்கை பெற்றாலும், சுக்கிரனும் சந்திரன் அல்லது புதன் சேர்க்கை பெற்றாலும், 7 ஆம் அதிபதி சந்திரன் புதன் நட்சத்திரங்களான ரோகினி, அஸ்தம், திருவோணம், ஆயில்யம், கேட்டை, ரேவதி போன்றவற்றில் அமையப்பெற்றாலும் தாய் வழி உறவில் அல்லது மாமன் மகளை மணம் முடிக்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.
? ஒருவரது ஜாதகத்தில் 7 ஆம் அதிபதியும், சுக்கிரனும் 3, 11 க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்று, சுபர் சாரம் மற்றம் சுபர் சேர்க்கை பெற்று, செவ்வாயின் சம்மந்தம் ஏற்பட்டிருந்தால் உடன் பிறந்தவர்களின் உறவினர்களின் வழியில் மண வாழ்க்கையானது அமையும்.
? 7 ஆம் அதிபதியோ, சுக்கிரனோ,
சனி, ராகு, கேது சேர்க்கை அல்லது சாரம் பெற்றிருக்கும் பட்சத்தில் நெருங்கிய உறவில் அமையாமல், தூரத்து உறவில் அந்நியத்தில் திருமணம் கைகூடும்.
?சுபகிரகங்களின் ஆதிக்கம் 7 ஆம் வீட்டிற்கும், 7 ஆம் அதிபதிக்கும் இருக்குமேயானால் ஜாதி மத வேறுபாடுமின்றி பிறந்த குலத்திலேயே திருமணம் செய்யும் வாய்ப்பு உண்டாகும்.
?ஒருவரது ஜாதகத்தில் 7 ஆம் வீட்டில் சனி அமையப் பெற்றாலோ, 7 ஆம் அதிபதி சனி சேர்க்கை பெற்றாலோ உறவுகளில் இல்லாமல் அந்நியத்தில் திருமணம் நடக்கும். சனிபகவானனவர் சுபகிரக சம்மந்தத்துடனிருந்தால் அந்நியத்தில் ஓரளவுக்கு நல்ல இடத்தில் வாழ்க்கை அமையும்.
?7 இல் அமையும் சனி & ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றாலும், 5ல் சனி & ராகு அல்லது கேதுயுடன் இணைந்தாலும், சனி, ராகு இணைந்து 7ம் அதிபதியின் சேர்க்கை அல்லது சுக்கிரனின் சேர்க்கை பெற்றிருந்தாலும் கலப்பு திருமணம், மதம் மாறி திருமணம், செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
?உங்கள் ஜோதிட நிபுணர்
'ஜோதிட கலாநிதி'
சுந்தர்ஜி M.Sc., M.Phil., M.A., B.Ed., D.Acu., D.Astro.,
ஸ்ரீ காலபைரவர் ஜோதிட
ஆராய்ச்சி நிலையம், வடிவீஸ்வரம்,
நாகர்கோவில்.