குவைத்தில் என்பிடிசி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மங்காப் என்ற இடத்தில் தங்குவதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 6 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஊழியர்கள் தங்கியிருந்தனர். இந்த அப்பார்ட்மென்ட்டில் உள்ள ஏதோ ஒரு வீட்டில் நேற்று அதிகாலையில் சமையல் செய்தபோது எதிர்பாராத தீ விபத்து ஏற்பட்டது. இந்த உடனடியாக அடுத்தடுத்த கட்டிடங்களுக்கும் பரவிவிட்டது. அனைவரும் தூங்கும் நேரம் என்பதால் பலர் தூக்கத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் இதில் 7 பேர் தமிழர்கள். 13 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். 30க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலர் புகை மூட்டத்தில் சிக்கி அவர்களால் உடனடியாக தப்பித்து வெளியே வர முடியாத நிலை. சிலர் மொட்டை மாடிக்கு தப்பி ஓடியதால் உயிர் தப்பினர். விபத்தை நேரில் பார்த்தவர்களும், விபத்திலிருந்து தப்பி வந்தவர்களும், நடந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி விலகாமல் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இது குறித்து தமிழகத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் நான் விருதுநகரை சேர்ந்தவன. நான் குவைத்தில் பணிபுரிந்து வருகிறேன். இந்த விபத்து குறித்து "குவைத்தில் எப்போதுமே பகலில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், நைட் ஷிப்ட் வேலைக்குதான் பலரும் செல்வார்கள். இரவு வேலையை முடித்துவிட்டு விடிகாலை வீட்டுக்கு வந்து சமைத்து சாப்பிட்டுவிட்டு தூங்குவார்கள். அப்படித்தான் சிலர் நேற்று விடிகாலை சமைத்துள்ளனர். இந்த கட்டிடத்தின் அடித்தளத்திலேயே கிச்சன் உள்ளது.இங்கிருந்தே தீ எல்லா இடங்களுக்கும் பரவியிருக்கிறது.
அதிகாலை நேரம் என்பதால் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த பலர் மூச்சுத்திணறி இறந்துவிட்டனர்.சிலர் தப்பிக்க நினைத்து மாடிகளில் இருந்து குதித்ததால் உயிரிழந்துவிட்டனர். இங்குள்ள அறைகளில் தங்கியிருந்தவர்கள் பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்... தமிழர்களும் இந்த கட்டிடத்தில் தங்கியிருந்தனர் எனக் கூறியுள்ளார். தீ விபத்தில் உயிர் தப்பிய தொழிலாளி ” புகை சூழ்ந்திருந்ததை பார்த்ததுமே உடனடியாக முகத்தில் துணியை கட்டிக்கொண்டு வெளியேறிவிட்டோம்.. பலருக்கு மூச்சுத்திணறல் வந்துவிட்டதால் தப்ப முடியவில்லை" என்கிறார் அதிர்ச்சி விலகாமல்.