tamilnadu epaper

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை!

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை!

தென்காசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் கடந்த சில மாதங்களாக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதனிடையே கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கோயிலில் புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை என பக்தர்கள் பலரும் குற்றம் சாட்டினர். 


இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. தென்காசியை சேர்ந்த நம்பிராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை கும்பாபிஷேகம் நடத்த கூடாது என கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில், கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.