தென்காசி மாவட்டம் யானை பாலம் அருகில் உள்ள சிற்றாறு நதிக்கரையின் அருகில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சங்கர நாயனார்,ஸ்ரீ கோமதி அம்மாள் ஸ்தலம் அமைந்துள்ளது இத் தல த்தில் ராகு, கேது பூஜை மற்றும் சனி, குரு பகவான் பூஜைகள் சிறப்பாக விசேஷமாக நடைபெறும் இத்தல த்தில் தமிழ்நாட்டின் பல இடங்களில் இருந்து பரிகார பூஜைகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இத்தல த்தில் நடைபெறும் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் நடைபெறும் ராகு,கேது பூஜைகள் மிகச் சிறப்பு வாய்ந்தவை திருமண தடைகள் மற்றும் குழந்தை பாக்கியம், கடன் தொலையிலிருந்து நிவர்த்தி பெற சிறப்பு யாகங்களும், பூஜைகளும் நடைபெறுகிறது இதில் பல மாவட்டங்களில் இருந்து குறிப்பாக பெண்கள் ஏராளமான கலந்து கொள்கின்றனர் இக்கோவிலில் நடக்கும் ஆடித்தவசு சங்கரன்கோவிலுக்கு அடுத்தபடியாக சிறப்பாக இருக்கும் தென்காசி மாவட்டம் அருகில் உள்ள கிராமத்து பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கோர் கலந்து கொள்வர்.