திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் 11 12 18 82 அன்று தான் பாரதியார் பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். இவரின் பெற்றோர் சின்னசாமி லட்சுமி ஆவார்கள். இவரின் கவி ஆற்றலை சிறுவயதிலேயே கண்ட எட்டியபுரம் சமஸ்தான புலவர்களால் பாரதி என்ற பட்டம் அளிக்கப்பட்டது. பாரதி என்ற பட்டம் அவருக்கு கிடைத்த போது வயது 11. நாளடைவில் சுப்பிரமணிய பாரதி என்ற பெயரும் மறைந்து பாரதியார் என சிறப்புடன் அழைக்கப்படலானார். .
தேசிய கவியான பாரதியார் இளமையில் காசியில் வாழ்ந்த போது பிராமணர்கள் யாரும் மீசை வைக்காத நிலையில் அங்கிருந்த பிராமணர்கள் மீசை வைத்து இருந்ததால் இவரும் மீசை வைத்து கொண்டார். . இவருடைய தமிழ் பற்றும் தேசியப்பற்றும் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன. விடுதலைப் போரில் தீவிரமாக ஈடுபட்டு ஆங்கிலேயர் அரசால் தேடப்பட்டு புதுச்சேரியில் கவிஞர் பாரதிதாசன் உடன் வாழ்ந்தவர் இவர். . புதுச்சேரியில் இருந்து தன் மனைவி ஊரான கடையநல்லூர் போக முயலும் பொழுது கடலூரில் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு சில நாட்கள் கடலூரில் சிறையில் இருந்தவர் இவர். இவருடைய பாடல்களுக்கு ஆங்கில அரசு தடை விதித்தது. . பாரதியார் சுதேசி கீதங்கள் பகவத் கீதை மொழியாக்கம் குயில் பாட்டு கண்ணன் பாட்டு பாஞ்சாலி சபதம் பாப்பா பாட்டு புதிய ஆத்திச்சூடி வசன கவிதை என பல படைப்புகள் பலவற்றை நமக்கு தந்திருக்கிறார்.
கவிஞர் ஷெல்லி தாசன் மீது பற்று கொண்டு ஷெல்லி தாசன் எந்த புனைப்பெயரையும் வைத்துக்கொண்டு எழுதி இருக்கிறார்.
பத்திரிகைகளில் அரசியல் கார்ட்டூன் முதன்முதலில் பாரதியாரால் தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
1949 ம் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வராக இருந்தபோது இவரின் பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
பாரதியின் கடைசி நாள் செப்டம்பர் 11. பாரதியாரின் பிறந்தநாள் இம்மாதம் 11ஆம் தேதி வருகிறது. இந்த நேரத்தில் அவருடைய கடைசி நாட்கள் பார்ப்போம்.
மகாகவி பாரதிக்கு முடிவு யானையால் ஏற்பட்டது என்பது தவறு . யானை சம்பவம் நடந்தது ஜூன் மாதத்தில் அவர் மறைந்தது செப்டம்பரில்.
யானை சம்பவத்திற்கு பின் உடல்நலம் தேறிவிட்டதாக பாரதிதாசனுக்கு கடிதம் எழுதினார் பாரதியார். யானை சம்பவத்திற்கு பின் திருவல்லிக்கேணி வீதிகளில் தேசிய பஜனை நடத்திருக்கிறார். மனைவியுடன் பல வெளியூர்கள் கூட்டங்கள் கலந்து கொண்டிருக்கிறார். உண்மையில் அவரின் முடிவு எப்படி நிகழ்ந்தது தெரியுமா ?
1921 செப்டம்பர் முதல் தேதி பாரதிக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. வயிற்று கடுப்பாக மாறியது. வயிற்றுப் போக்கின் காரணமாக அவர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இரவு 1.30 மணிக்கு அவரது உயிர் இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தது. பாரதியின் இறுதி ஊர்வலத்தில் மிகக்குறைவானவர்கள் தான் கலந்து கொண்டனர். பாரதியின் இறுதி ஊர்வலத்தில் கோளை கிருஷ்ணமாச்சாரி பரளிசு நெல்லையப்பன் ஆர்யா ஹரிஹர சர்மா ஆகியோர் திருவல்லிக்கேணி கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். பாரதிக்கு மகன் இல்லாததால் இறுதி சடங்கு செய்ய அவரின் தூரத்து ஒருவர் உறவினரான ஹரிஹர சர்மா கொள்ளி வைத்தார். 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இந்திய வரலாற்றில் இணையற்ற கவிஞராகத் திகழ்ந்த அவரை இந்த நாளில் போற்றி வணங்கி புகழ வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும் பாரதியின் புகழ் ஓங்குக.
ந. சண்முகம் திருவண்ணாமலை