[18:05, 12/16/2024] Tamilnadu Epaper: பிள்ளையார் கோவில் பலர் தோப்புக் கரணம் போட்டு பிள்ளையாரை வணங்குவதை பார்த்திருப்போம்.
நன்கு ஆராய்ந்துதான், நம் முன்னோர்கள் வழிபாட்டோடு தோப்புக்கரணத்தை
இணைத்திருக்கிறார்கள்.
தினமும் 3 நிமிடம்
தோப்புக்கரணம்
உடலைவலுவாக்கும்.
தோப்புக்கரணம் போட்டாலே
போதும்யோகாசனத்தின்
பெரும்பாலான பலன்களும் கிடைத்துவிடும் என்று சொல்வார்கள்.
நமது முன்னோர்கள்
வழிபாட்டின் ஒரு பகுதியாக
தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.
உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி.
தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப்பிடித்துக் கொள்கிறோம்.
காதுமடல்களில் உடலின் எல்லா
உறுப்புகளையும் இணைக்கிற
புள்ளிகள் இருக்கின்றன.
காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும்செயல்படுவதற்கு
ஆன தூண்டுதல்கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது.
தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர்,
ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை
அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக்
கொண்டு தோப்புக்கரணம் போடவேண்டும்.
பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச்
சேர்த்து வைத்துக் கொண்டு
தோப்புக்கரணம் போட வேண்டும்.
வலது கைவிரல்களால் இடது காது மடல்களையும்,இடது கை விரல்களால் வலது காதுமடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும்.
உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.
இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து
வெளிவிடுவதால், நமது
தண்டுவடத்தில் அமைந்துள்ள
மூலாதாரம் போன்ற 7 சக்கரங்களும் சீர்படும். நரம்பு மண்டலமும் ஊக்குவிக்கப்படும்.
உட்கார்ந்து எழும்போது,காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்குவேலை கொடுக்கிறோம்.
உடல் முழுக்கஇரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்தசோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.
Vericose Vein என்ற நோய் வராமல் தடுக்கலாம்
முதலில் 10 தோப்புகரணம், பின் படிப்படியாக மூன்று நிமிடங்கள் வரை தோப்புக்கரணத்தைத்தொடர்ந்து
செய்தால், நல்ல உடற்பயிற்சி.
உடலும் மனமும் உற்சாகமாக இருக்கும்.
-S. Narayanan
Chennai