தோல்வி என்பது தவறல்ல!
வெற்றி என்பதும் எளிதல்ல!
தோல்வி என்பது என்றும்
திறமையின்
தோல்வி
அல்லவே அல்ல!
தோல்வியை
எண்ணி
கண்ணீர் வடிப்பது முறையல்ல!
அதில்
கலங்கித் துவள்வதும் சரியல்ல!
அறிவுடை மாந்தர்க்கு அவை அழகல்ல!
கவனமுடன் படித்தாலும் கவனப்பிசகால் தவறலாம்!
தவறுதல் என்பது தவறுக்கான தண்டனையல்ல!
தவறுகளை திருத்திக்
கொள்வதற்கான வாய்ப்பேயாகும்!
புரியாத பாடத்தை புரியும் வரை கற்றுக்கொள்!
தோல்வியைத் தோற்கடிக்கும் கலையை பெற்றுக்கொள்!
பள்ளிக்கல்வியுடன் தன்னம்பிக்கை கல்வியையும் படித்துவிடு!
விபரீத எண்ணங்களைத் தவிர்த்து விடு!
மீண்டும் ஒரு முறை முயன்று விடு!
பெற்றவர்க்கு பெருமை சேர்த்து விடு!
வெற்றியும் உந்தன் வசமாகும்!
உன்
வாழ்வின்
கனவுகள் நிஜமாகும்!
அதுவே
கற்ற கல்விக்கு அழகாகும்!!
-ரேணுகா சுந்தரம்