நாகர்கோவில், மே 24–
நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்., சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் நினைவு நாளையொட்டி நேற்று நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் டதி பள்ளி ஜங்சனில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் வக்கீல் நவீன்குமார் தலைமை வகித்தார். ஏராளமான காங்கிரசார் கலந்துகொண்டனர். அங்கு பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தனர்.