ஈர்க்கும் விசையும்
எதிர்ப்பு விசையும்
எத்தனையோ…
அத்தனைக்கும் ஆட்பட்டும்
ஒட்டிக்கொள்ளவோ
தெறித்தோடவோ அன்றி
தனித்தன்மை ஏந்தி
தனக்கான இடத்தைத்
தக்கவைத்து
அந்தரத்தில் சுழன்றபடி
ஆவன புரியும்
கோள்களையும் நட்சத்திரங்களையும்
வியந்து அண்ணாந்து பார்க்கிறேன்
தத்தமது மொழியில்
தனதுணர்வுகளை அண்டவெளியில்
பரிமாறிக் கொண்டு
சமன் செய்து பராமரித்து வரும்
அவற்றின் நுண்ணிய - துல்லிய மேலாண் செயல்பாட்டில்
மெல்லிய இசையாய்
நானும் கைகோர்த்துக் கொள்கிறேன்…
புவி வெப்பம் தணியுமாறே !
•••••••••••••••••••••••
கவிஞர் ம.திருவள்ளுவர்
திருச்சி