நாம் ஒரு கணக்கு போடுவோம் ,அது சமயத்தில் சரியாக அமையும்!
சில நேரங்களில் சரியாக அமையாது!
நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் சந்தோஷமே!
நடக்காவிட்டால் மனம் வருந்தி பயனில்லை!
எதுவும் நடக்கலாம்
எதிா்பாராமல் நடக்கலாம்!
விதி விட்ட வழிதானே!
அவனன்றி எதுவும் அசையாதே!
அது புாியாமல் வாழ்வதில் என்ன பயன்?
இதுதான் இன்றைக்கானது என இறைவன் தீா்மானித்துவிட்டால்?
நம் கையில் என்ன இருக்கும்?
உழைப்பில் கிடைப்பது மட்டுமேநிலைக்கும்! உழைக்காமல் வருவது நிலைக்காதே!
நான் எனும் அகந்தை இருக்குமிடத்தில் நன்மைகள் எதுவும் நடக்காது!
வாழ்க்கை ஒரு வட்டம் அதில் கீறல்படாமல் வாழ்வது பெரிய கஷ்டம்!
அதை உணர்ந்து வாழ்வது உன் இஷ்டம்!
அளவை மீறினால் வருவதோ நஷ்டம்! நிதானம் தவறாதே நிம்மதி தானே வரும் .
-நா.புவனாநாகராஜன் செம்பனாா்கோவில்