சிந்துவை துரத்தி..துரத்தி நுரைக்க..நுரைக்க.
.காதலித்தவன் பரத்.
அவள் பேச்சிலும்..
செய்கையிலும் நாகரிகத்திலும் அவளிடம் தன்னை இழந்தவன் அவன்.
பரத்தின் பனிக்கட்டி உள்ளம்..பளிச்சென்ற பேச்சு..பிறருக்கு உதவும் குணம் போன்றவற்றில் பரத்தின் மீது சிந்துவும் மயங்கியிருந்தாள்.
எப்போதும் சிவகங்கைப்பூங்காவில் சிந்துவின் வரவுக்காக மரத்தின் கீழ் காத்திருக்கும் அவன் அவள் வந்து
மரத்தின் கீழ் அமரும்போதெல்லாம் அவளைப்பார்த்து " அட, வேரிலுமா பூ!" என்று சொல்லி அவளை குளிர்விப்பவன்...
இன்று சிந்து வருவதாகச்சொன்ன நேரத்தைக்கடந்து ..
நேரம் வெகுதூரம் போனதால்.. நேற்று சிந்துவிடம் சொன்னப்படி அழுகையும் ஆத்திரமும் பீறிட்டு வர விருட்டென்று தற்கொலை செய்துகொள்ள பக்கத்தில் உள்ள சிவமலைக்கு விரைந்தான்.
நேற்று இருவீட்டார் எதிர்ப்புகளையும் மீறி
அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்டமுடிவுதான் இது.
"இதப்பாரு சிந்து நாளை காலை நான் சொன்ன நேரத்துக்கு நீ பூங்காவிற்குவரலை.. நாம கதைப்பேசப்
போவோமே அந்த சிவமலையிலிருந்து நான் தற்கொலை செய்துக்குவேன்!.."
என்று தான் கத்தி சொன்னதும் அவள் ஈரவிழிப்பார்வையோடு பிரிந்ததும் ..அவன் கண்முன் அடிக்கடி வந்து சென்றப்படி இருந்தன...
மலை ஏறத்தொடங்கியவன் அதன் உச்சியை நோக்கி விரைந்தான்.
அவனுக்கு முன்னால் உச்சியில் சிந்து நின்று கொண்டிருந்தாள்.
"பரத், உன் மன உறுதி தெரிந்துதான் உனக்கு ஒரு அதிர்ச்சியூட்ட உனக்கு முன்னாடியே நான் மலரோடு தனியாக இங்குவந்தேன்!" என்றாள் . புன்னகை மலர...
அவளைப்பார்த்து உறைந்தவன் எதுவும் பேசாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான்.
"பரத்!..பரத்!..இப்படியே நீ சிவன் மாதிரி நில்லு!..சுயநலமா நீ மட்டும் தற்கொலைக்கு துணிந்தது மாதிரி நானும் இதிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்கிறேன்!"
. என்று பொய் கோபம் கொண்டு திரும்பி நடக்கலானாள் சிந்து.
"நில்லுங்கள் ரோஜாவே!..என்று பரத் ஓடிப்போய் அவளை பின்புறமாக ஒரு குழந்தையைப்போல் கட்டிக்கொண்டான்.
-- அய்யா
று ச.புகழேந்தி