குளிர்காலப்
பூவா
வாய் பேசும்
நிலவா
இளவேனில்
காலத்தில்
தேன் தேடும்
வண்டா
குவளை மலர்
அரும்பா
புன்னை மர
நிழலா
எனை அணங்கும்
எழிலா
அகப்பொருள்
நூலா
புறப்பொருள்
நிரம்பிய
பெண்ணா
அகல் விளக்கில்
எழுந்த
மாமையா
காதல் வானத்தில்
தெறித்து ஓடும்
மின்னலா
கானமதில்
கானம் பாடும்
குயிலா
அந்த முழுமதி
வீசிய
முதலொளியா
குளிர்தென்றல்
கொஞ்சும்
குமரியா
குளுகுளுவென
விழுந்தோடும்
கங்கையா
பருவத்தில்
உருண்டோடும்
இலவம்பஞ்சா
சங்கால
மலர்களின்
சாயலா
சங்குக் கழுத்துக்கு
சந்தையா
சிந்திசையின்
சங்கமா
என் வாழ்வின்
திசையா
எனை உனக்குல்
விழுங்கிய கடலா
என் ஆணவத்திமிர்
அடக்க வந்த
குறிலா நீ…?
-யேர்மனி வயவை லம்போ