tamilnadu epaper

நீங்கதான் கடவுள்!

நீங்கதான் கடவுள்!

 

புத்தாண்டை முன்னிட்டு அன்று அந்தத் தெருவே களை கட்டியிருந்தது.

அந்த பரபரப்பிலும் சிறுவன் ஒருவன் மட்டும் ஏக்கமாக கடை ஒன்றைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அது ஷீ கடை

  மற்றவர்களின் ஷூக்களுக்கும் பாலீஷ் போட்டுச் சயமாகச் சம்பாதிக்கும் அந்தச் சிறுவனுக்கு ஷீ வாங்க வேண்டும் என்று வெகு நாளாக ஆசை.

தீர்மானமாக ஒவ்வொரு கடையாக ஏறி ஏறி இறங்கினான்.

தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து ஷீவில் இருக்கும் லேஸ் கூட வாங்க முடியாது என்பதை உணர்ந்தவன், அந்தக் கடைகளையே ஏக்கமாய்ப் பார்த்தான்.

    அப்போது தன் தோளில் யாரோ கைப்பட திடுக்கென திரும்பிப் பார்த்தான். "இங்க என்ன பார்க்கிறே" என்று கேட்டாள் ஒரு பெண்.

  அடுத்த மாசமாவது நிறைய காசு சம்பாதிச்சு, ஷூ வாங்கணும்னு வேண்டிக்கிட்டு இருந்தேன் " என்றான்.

அவன் சொன்ன அந்த வார்த்தைகளில் உண்மை இருப்பதை உணர்ந்த பெண்

நேரே தன் கடைக்குள் சென்று அந்தச் சிறுவனின் காலுக்கு ஏற்றவாறு அழகிய ஷுக்கள் ஒரு ஜோடியைத் தந்தாள்.

அந்த சிறுவனுக்கோ ஒரே குஷி ஆகி விட்டது.

 அவன் கண்ணில் பட்ட சந்தோஷத்தைப் பார்த்த அப் பெண், சிறுவனிடம், ."நான் யார்ன்னு தெரியுமா?" என்று கேட்டாள். தான்தான்

அந்தக் கடைக்கு முதலாளி என்று கண்டு பிடித்து விடுவான் என்று எதிர்பார்த்தாள்.

 சற்றும் சளைக்காமல் அடுத்த நொடியே அவனிடமிருந்து வந்ததுபதில்,

"நீங்கதான் கடவுள்"!

இந்த பதிலால் அப்பெண் மெய் சிலிர்த்தாள்.

 

 

அன்புடன்

எஸ். மாரிமுத்து.

சிட்லபாக்கம்.

சென்னை - 64.