பச்சையப்பன் கல்லூரி நிறுவனர் கல்வி வள்ளல் பச்சையப்பர் அவர்களின் 231ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர் திமுக முன்னாள் செயலாளர் மு.ப. சரவணன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் வள்ளல் பச்சையப்பர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். இதில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பணியாற்றிய கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெருமளவில் திரண்டு வள்ளல் பச்சையப்பர் அவர்களுக்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினர்.