பவானி கொஞ்சம் பதட்டமாய் இருந்தாள். இன்று அவள் திலீபனின் குடும்பத்தை முதன் முதலாக சந்திக்க இருக்கிறாள்
திலீபனை அவளுக்கு கேந்திரிய வித்யாலயாவில் எட்டாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே தெரியும். வெகுநாள் வகுப்பறை நட்பு ...காதலாக மலர்ந்தது.
திலீபன் மென்பொருள் பட்ட மேல் படிப்பு படிக்க அமெரிக்கா செல்லும் யோசனையில் இருக்க; பவானி பெங்களூரில் லா காலேஜ் படித்துக் கொண்டு இருக்கிறாள். அவன் வெளி நாடு செல்வதற்கு முன் வீட்டில் தங்கள் விருப்பத்தை சொல்லிவிட, எண்ணினார்கள்.
போன ஞாயிறு அன்று சகஜமாக திலீபன் வீட்டிற்கு வந்து, பவானியின் பெற்றோரை சந்தித்து விட்டு, தங்கள் விருப்பத்தை ச் சொல்லி விட்டான். அவர்களுக்கு திலீபன் குடும்பத்தை தெரியும் என்பதால்" திலீபன்! பவானி உங்கள் பெற்றோரை சந்திக்கட்டும். அவர்கள் விருப்பம் என்னவாக இருக்கும்; என்பது எங்களால் கணிக்க முடியவில்லை. பவானி லா படிப்பது அவர்களுக்கு இசை வாய் இருக்குமா, என்றும் தெரியவில்லை. இவளுடைய வேலை மிகவும் சவாலான வேலை. உங்கள் வீட்டிற்கு பொருந்தி வருவாளா, என்பதை அவர்கள் தான் கணிக்க வேண்டும்.நீ இந்த கால பையன் போல் நாங்கள்தானே சேர்ந்து வாழப் போகிறோம்; என்பதெல்லாம் எங்களுக்கு சரிவராது. அவளை உன் வீட்டாருக்கு பிடித்தால்,நாங்கள் மேற் கொண்டு யோசிக்கலாம். எங்கள் பதில் உன் வீட்டாரை பொருத்துள்ளது. த பால் இஸ் இன் யுவர் கோர்ட்" என்று தெளிவில்லாத முடிவை சொல்லிவிட்டனர்.
திலீபன் இந்த வாரம் அவர்கள் வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளான். " திலீபா! எனக்கு பதட்டமாய் இருக்கு. ஏதும் கேள்விகள் கேட்டால் ஏதேனும் உளறி விட போகிறேன் . .. பயமாய் இருக்கு" என்றாள்
" லா காலேஜில் படித்துக் கொண்டு என்ன பயம்? பி யுவர் ஓன் செல்ஃப்"" என்று திலீபன் தைரியம் கொடுத்தாலும்; அவளுக்கு துணிவு வரவே இல்லை.
பவானியின் அப்பாவின் துணையோடு வருவதாக சொல்லி விட்டாள். இரண்டு நாளில் அவளுக்கு ஒரு யோசனை, மனதில் தோன்றியது. வீட்டின் அமைதியான சூழ் நிலையில் அதை செயல் படுத்திக் தன்னை தயாராக்கிக் கொண்டாள். திலீபனுக்கும்,தான் துணிவுடன் இருப்தாக குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி விட்டதும்,அவள் கொஞ்சம் அமையானாள்.
திலீபன் அவளை அறிமுகப் படுத்தினான்.இரு வீட்டாரும் ஒரு அளவு தெரிந்தவர்களாய் இருந்ததால் அறிமுகம் எளிதாய் இருந்தது. திலீபனின் அப்பாவும் பவானியின் அப்பாவும் அரசியல் , ஷேர் மார்க்கெட் என்று பேசின தில் சூழ்நிலை இறுக்கம் சற்று குறைந்தது. திலீபன் அவளை அறிமுகப்படுத்திய பின் அவன் வீட்டார் அவளைப் பற்றி விசாரிக்க; முதலில் தயக்கமாய் பதில்கள் சொன்னவள்; போகப் போக துணிவுடன், மனதில் பட்டதை பேசினாள். அவன் வீட்டாருக்கும் அவளைப் பிடித்துப் போயிற்று. இரண்டொரு நாளில் மீண்டும் சந்திக்கலாம் என்று திலீபன் வீட்டார் சொல்ல; பவானியின் அப்பாவும், அதை ஏற்றுக் கொண்டார்.
அன்று இரவில் திலீபன் ஃபோன் செய்து
நீ எப்படி இவ்வளவு துணிவாகப் பேசினாய்,,;என்று கேட்க; பவானி, " நான் ஒரு பவர் பாயிண்ட் ப்ரசென்ட்டேஷன்" செய்து கொண்டு வந்திருந்தேன். ஒரு வேளை எனக்கு தைரியம் இல்லாமல் போனால், அதைப் போட்டுக் காட்டி, சமாளிக்க ஒரு எண்ணம்
இருந்தது. ஆனால் அதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது.ஆயினும் நான் அதை தயார் படுத்தியதால் என் தன்னம்பிக்கையை கூட்ட அது மிகவும் உதவியாக இருந்தது; என்று சிரித்தபடியே சொன்னாள், பவானி; அறிவியல் துணை இக்காலத்தில், எது வரை வேண்டியதுள்ளது; என்று பாருங்களேன்.
சசிகலா விஸ்வநாதன்