மனைவி மகன்களுடன் இன்றுமாலை கடைவீதிக்குச்சென்றேன்
இன்று
மாலைகுளித்துவிட்டு மின்விளக்குகள் ஒளிர கடைவீதி அழகை கண்டுரசித்தபடி நவீதியை உலாவருவதுப எத்தனை பரம ஆனந்தம்! அனுபவித்தால்தான் தெரியும்.
பின்னால் வந்துக்கொண்டிருந்த மனைவியிடமிருந்து குரல்.. "என்னங்க.. நானும் பாரத்துக்கொண்டே வருகிறேன்
ஒவ்வொருத்தனும் நகைகடை வாசலிலும்.. துணிக்கடை வாசலிலும் நின்றுக்கொண்டுதரும் பிட் நோட்டிஸ்களை வாங்கி வாங்கி பேண்ட் பாக்கெட்ல சொருகிட்டேவர்றிங்க..?
என்னமோ விளம்பரத்தை படிச்சிட்டு கிலோ கணக்கில தங்கமும் விதவிதமான பட்டாடைகளும் வாங்கி வீட்ல குவிக்கப்போறிங்களா.. பேசாமல் அதையெல்லாம்கீழே போடுங்க என கடிந்துக்கொண்டாள் மனைவி.
அதுல்லாம்மா..
நான் வேலையில்லாமல் சென்னைக்குப்போய் கஷ்டப்பட்டப்ப..
ஒரு தனியார் வங்கியின் டி.எஸ்.ஏ. டில் தற்காலிக பணி..
இந்த மாதிரி பேம்ப்லெட் நிறைய்ய அடிச்சி தருவாங்க.. அதை யெடுத்துக்கிட்டு தீ.நகர் கிளம்பிடுவேன் போற வர்ற மக்களிடம் தருவேன்.
யாராவது லோன் கேட்டு வாங்கினாங்கன்னா எனக்கு இத்தனை சதவீதம்னு கமிஷன் பேசிக்கிள் வேலை.
அன்ன ஆகரம் சரியாக கிடையாது..
ஒரு லோனாவது க்ளிக் ஆகாதா? என ஏக்கத்திலிருப்பேன்
அப்ப இப்படித்தான் நான் தரும் நோட்டிஸ்களை படிச்சிக்கூட பார்க்க மாட்டாங்க..
உடனே வீசியெறிஞ்சிடுவோங்க.. அப்ப ஒரு வலி ஏற்படும் பாரு..!
அது இவங்களுக்கும் நான் தரக்கூடாதுன்னு.
பிட் நோட்டிஸ்களை
வாங்கி மடித்து வைத்துக்கொள்வேன்.
தவிர அவுங்களுக்கம் இப்ப படிக்கலைன்னாலும் வீட்டிற்குப்போய் படிப்பாருன்னு ஒரு நம்பிக்கையை தருவோம்னுதான்..
மேலும் அதை வாங்கி கீழே கிடாசினால் ரோடு குப்பையாகும்.பாரக்க அசிங்கமாக இருக்கும் இதையெல்லாம் தேவையா..?
இதோ போற வழியில கோவில் இருக்கு அங்க போய் சாமிக்குப்பிட்டுவிட்டு
அங்கு தூண் இடுக்கிலோ..
சொருகி வச்சால்..
விபூதீ குங்குமம் வீட்டிக்கு மடிச்சி எடுத்துட்டுப்போக
உதவியாக இருக்குமே ..
என்றேன்.
-இரா ரமேஷ் பாபு