tamilnadu epaper

பிடிக்காத எமன்

பிடிக்காத எமன்

 

 

   எமன் என்பது அவன் பெயர் இப்படி ஒரு பெயரை யாராவது தன் மகனுக்கு வைப்பார்களா வைக்க மாட்டார்கள்.

        சுந்தரம் பிறந்த தன் மகனுக்கு ஆத்திரத்தில் அவன் இட்ட பெயர் இந்த பெயர். 

       வேண்டாம் வேறு நல்ல பெயர் வைக்கலாம் என உறவினர்களும் நண்பர்களும் சொல்லியும் அவனின் ஆத்திரமும் கோபமும் அடங்கவில்லை. 

      அந்த பெயரை தன் மகனுக்கு வைக்க காரணம் அவன் அமாவாசை இரவு பனிரெண்டு மணிக்கு பிறந்தானாம்.

      அவன் அரசு மருத்துவ மனையில் பிறக்கையில் எவ்வளவோ தீவிர சிகிச்சை அளித்தும் சுந்தரத்தின் உயிருக்கு உயரான மனைவியை காப்பாற்ற இயலவில்லையாம். 

      குழந்தை மட்டுமே கறுப்பாய் சுந்தரம் விரும்பா வண்ணம் பிறந்தது அந்த குழந்தையை ஆசையாய் அவன் பார்க்க பிரயாசப்படவில்லை.

    "சுந்தரம் பாரு உனக்கு கடவுள் அழகான ஓர் ஆண் குழந்தை கொடுத்திருக்காரு இதுக்கு தான கோயில் கோயிலா அலைஞ்ச அஞ்சும பொட்ட புள்ளைங்க ஆறாவது இது ஆண் பிள்ளை பாரு கறுப்பா இருந்தாலும் உன் ஜாடையில இருக்குது " என்றாள்.

   அவனோ வெறுப்பாய் அந்த முகத்தை பார்க்க விரும்பாமல் வேறு பக்கம் திரும்பி "அம்மாவ தின்னு பொறந்த அந்த சனியன என் கண்ணுக்கு காட்டாக நான் சாகர வரையிலும் அத கண்ணுல பார்க்க மாட்டேன்" என்றான்.

   அவனின் பெண் பிள்ளைகள் ஆசையாய் "அப்பா அவன் நம்ம தம்பி பாப்பா இல்லையா அப்படி சொல்லாதிங்க" என்றார்கள்.

    "எனக்கு நீங்க போதும் இது நம்ம உயிர எடுக்க பிறந்த எமன்" என்றான்

     பிறகு பாட்டி வீட்டில் கிராமத்தில் எமன் வளர்ந்து வந்தான்.

      அந்த ஊரில் எமனை எல்லோருக்கும் பிடித்தது இதுவரை அவன் அப்பா வந்து பார்த்ததில்லை. 

    அந்த கிராம அரசு பள்ளியில் நன்றாக படித்து வந்தான் அந்த பெயர் மட்டும்தான் யாருக்கும் பிடிக்கவில்லை அவனின் குணம், அறிவு எல்லோருக்கும் பிடித்தது.

    எமனுக்கு செஸ் விளையாட்டு ரொம்ப பிடிக்கும் தன் பக்கத்து வீட்டு நண்பனுடன் நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் விளையாடுவான் வருடங்கள் கடந்தது

     மாவட்ட, மாநில அளவில் விளையாடி வெற்றி பெற்றான் 

      தின செய்தி நாட்களில், தொலைக்காட்சிகளில் எமனின் சாதனைகளை சொல்லி அவன் முகத்தையும் காட்டினார்கள்.

     தமிழ்நாடு அரசாங்கம் அவனுக்கு பாராட்டு விழா நடத்தி பல இலட்ச ரூபாய்கள் வழங்க திட்மிட்டு எமனின் பெற்றோர்கள் அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியது.

    அந்த பாராட்டு விழாவில் வளர்ந்த தன் மகனை சுந்தரம் கண்ணீரோடு பார்த்தான் 

எமன் யாரையோ பார்ப்பதை போல தன் தகப்பனை பார்த்தான்.

    ஒரு தாயாய் தகப்பனாய் மொத்த உறவாய் அவன் உள்ளத்தில் வயதான அவன் பாட்டி மட்டுமே அச்சமயத்தில் அன்பாய் ததும்பிக் கொண்டிருந்தாள்.

     எமனுக்கு பணமோ, மக்களின் புகழாரமோ எதுவும் அவன் பாட்டியின் அன்புக்கும், அரவணைப்புக்கு முன்பாக ஒரு பொருட்டாக தெரியவில்லை.

 

 

கவிமுகில் சுரேஷ்

தருமபுரி