குமாரு.. சிறுதுளி பெருவெள்ளம் போல சிறுதொழில் பெருந்தொழிலுக்கு வழி வகுக்கும்டா!


     நீ உழைக்க தயாராக இருந்தா ஓராயிரம் வழிகள் இருக்குடா!.." என்று அரசுப்பணியில்" />

tamilnadu epaper

பிழைப்பு

பிழைப்பு


    "குமாரு.. சிறுதுளி பெருவெள்ளம் போல சிறுதொழில் பெருந்தொழிலுக்கு வழி வகுக்கும்டா!


     நீ உழைக்க தயாராக இருந்தா ஓராயிரம் வழிகள் இருக்குடா!.." என்று அரசுப்பணியில் இருக்கும் நண்பனுக்கு கூடுதல் வருமானத்துக்கு வழி சொன்னான் உயிர் நண்பன் கோபி.


"சரிடா..சரிடா!..ஒன்னு ரெண்டு சொல்லு! முயற்சிப்பண்றேன்." என்றான் குமார்.


" முயற்சி இல்லடா..விடா முயற்சி பண்ணணும்!"


" "போதும்டா!..படுத்ததே!" ..நான் ஒன்னும் தெரியாத முட்டாளா?...

      ஒரு அரசு

 ஊழியன்டா!..நீ விஷயத்துக்குவா!..

   கம் டு த பாய்ண்ட்!.."என்று குமார் கத்த ..கோபி சொல்லத்

தொடங்கினான்.


       " எவ்வளவோ இருக்குடா குமார்!..இத பகுதி நேரமா செய்தாலே கைநிறைய சம்பாதிக்கலாம்..

. .முழு நேரமா எடுத்து செய்ய பல தொழில்கள் இருக்கு!..நீ பெருஞ்

செல்வந்தராயிடலாம்!..

நீதான் அரசு வேலை!..

அரசுவேலை!..ன்னு குண்டுச்சட்டியில குதிரை ஓட்டிக்கிட்டு இன்னும் கிணத்துத்தவளையா இருக்கவே ஆசைப்பட்டே!..

  அரசு வேலையில நீ எப்படிடா கோடீஸ்வரானாக முடியும்?"


     "போதும்டா கோபி!..முடியல.. பொம்பள மாதிரி விலாவாரியா அறுக்காம சீக்கிரம் சொல்லித்தொலைடா!" என்றான் குமார்.


" சீட்டு பிடிக்கலாம்...

   ஆவின் பால் எடுத்து வீட்டிலிருந்தபடியே விற்பனை செய்யலாம்...

    புடவை..கைலி..டீ ஷர்ட் எடுத்து சிறு லாபத்தில் விற்கலாம்..."


      இப்படி நண்பன் சொன்ன எதையும் கேட்காமல் எளிதாக கிடைக்கிறதே என்று கையூட்டு வாங்கி கைதாகி கூண்டுந்தில் பயணிக்கும் குமாரின் முன் நிழலாடின கோபியின் யோசனைகள்....



- அய்யாறு ச.புகழேந்தி