" அழகு கொள்ளை அழகு கரகாட்டகாரி லதா . சின்ன வயசு கலையில் கவனம் ஏழ்மையை விரட்ட ஆயுதம் கரகாட்டம் .
" சங்கர் லதாவை விட பெரியவன் கூலி வேலை, நல்ல உழைப்பாளி லதாவின் மீது ஒரு கண் எப்பவும் சங்கருக்கு உண்டு.
லதாவும் அதை நன்கு கவனித்தது உண்டு .
" சில ஆண்டு நகர புதிதாய் அந்த ஊருக்குள் வந்தாள் பரதநாட்டிய நங்கை லலிதா .
சங்கரின் பார்வை லலிதா பக்கம் தாவியது லதாவை விட அழகு லலிதா . லலிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டான் சங்கர்.
" லதா தன் காதல் தோல்வியால் இனி தலையில் கரகம் வைத்து ஆடுவதில்லை என்று சபதம் எடுத்து கூலி வேலைக்கு சென்றாள்.
லலிதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது பிரவத்தில் லலிதா உயிர் இழந்தாள் . அனாதையாய் தாய் இல்லாமல் தவித்தது சங்கரின் குழந்தை .
சங்கர் லதா முகத்தை பார்க்க முடியாமல் தவித்து தன் குழந்தையை லதாவின் காலடியில் போட்ட படி கதறி அழுது லதாவின் காலைக் கழுவினான்.
குழந்தையை வாரி எடுத்து முத்தமிட்டு அழுதபடியே கொஞ்சினாள் லதா .
திரும்பி பார்க்காமல் அந்த ஊரை மனதில் சுமந்தபடியே
சங்கர் வேறு இடம் தேடியவனாய்
மெல்ல மெல்ல நகர்ந்தான் சங்கர் .
புதிய உறவான தன் குழந்தைக்கு சங்கர் என்று பெயர் சூட்டி வளர்க்க தொடங்கினாள் லதா .
மீண்டும் தலையில் கரகம் எடுத்து வைத்து கரகாட்டத்தை ஆடத் தொடங்கினாள் லதா தன் பிள்ளையின் நிலை ஏழ்மையாய் மாறிவிடக் கூடாது என்கிற வைராக்கியத்தால்
புது அவதாரம் எடுத்தாள் லதா ......"
- சீர்காழி .ஆர். சீதாராமன் .
- 9842371679 .