tamilnadu epaper

புதுமைப் பெண் ரமணி

புதுமைப் பெண் ரமணி

 

" ராக்கப்பன் -ரமணி தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் ஒரு பெண் ஒரு ஆண் . ராக்கப்பன் ஒரு கட்டிட மேஸ்திரி..."

 

   " ஒரு வீடு கட்டும் பிரச்சனையில் ராக்கப்பன் தன் தொழிலாளி குமாரை அடிக்க அவன் கீழே விழுந்து உயிர் இழந்தான். கொலை குற்றமாக மாறி ஆயுள் தண்டனை பதினாறு ஆண்டுகள் விதிக்கப்பட்டது ராக்கப்பனுக்கு ..."

 

      ராக்கப்பன் ஜெயிலுக்கு சென்று விட இடிந்து போன ரமணி குடும்ப பொறுப்பை ஏற்றாள் .

 

    ஒரு வருடம் கழித்து வேறு ஊருக்கு இடம் பெயர்ந்து தன் பிள்ளைகளை படிக்க வைத்தாள் ரமணி .

 

       தையல் கடை சின்னதாக ஆரம்பித்து வளர்ந்து வந்தாள் ரமணி . தன் பிள்ளைகள் மாலையில் பள்ளிப் படிப்பு முடிந்து தையல் கடையில் ரமணிக்கு உதவி செய்தனர் .

 

           பிள்ளைகளிடம் அப்பா பற்றி ரமணி வெளிநாடு வேலை பல ஆண்டுகள் கழித்து தான் வருவார் என்று சொல்லி தன் பிள்ளைகளை குணமாக வளர்த்தாள் ரமணி .

 

     காலங்கள் உருண்டு ஓடியது ரமணியின் பிள்ளைகள் கல்லூரி படிப்பு முடிக்கும் தருவாயில் வந்து வளர்ந்து விட்டனர்.

 

       ராக்கப்பன் சிறை தண்டனை முடிந்து வெளியில் வரும் காலம் நெருங்கிட ரமணி தன் வீட்டில் பிள்ளைகளிடம் ராக்கப்பன் செய்யும் தொழில் பற்றியும் வேறு வீடு மாறி தையல் கடை வைத்து பிழைப்பு நடத்துவது பற்றியும் கூறி வீட்டுக்கு வரும் போது அந்த கெட்டப்பில் வரும் படி கூறிவிட்டு பணமும் ராக்கப்பனிடம் கொடுத்து விட்டு சென்றாள் .

 

    " ராக்கப்பன் விடுதலையானதும் வெளியில் வந்து நல்ல வாடகை கார் பிடித்து நல்ல மார்டன் டிரஸ் அணிந்து ஃபாரின் பொருட்கள் நிறைய வாங்கி எடுத்துக் கொண்டு , ஃபாரின் சாக்லெட் வாங்கி , ஹெர் ஸ்டைல் மாற்றி அழகாக வந்து வீட்டு வாசலில் இறங்கினான் .

 

     இரண்டு நாள் சென்றதும் பிள்ளைகள் இரண்டும் ராக்கப்பனிடம் வந்து விடுங்கப்பா தொழில் செய்யும் போது இது சகஜம் தான் நீங்கள் வேண்டுமென்றே கொலை செய்ய வில்லை , நீங்கள் கொலை செய்த குமார் மகன் ராகுலை எங்கம்மா சிவில் இன்ஞினியருக்கு படிக்க வெச்சு இருக்காங்க என்றார்கள் .

 

      ராக்கப்பனுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் மன அழுத்தம் , மனபாரம் இறங்கியது போல் உணர்ந்தான் . பிள்ளைகளின் மன முதிர்ச்சியை கண்டு வியந்தான் .

 

             இப்போது கம்பீரமாக வீடு கட்டும் மேஸ்திரி வேலையை மீண்டும் தொடங்கினான், குமார் மகன் ராகுலை வழிகாட்டியாகவும் பார்ட்னராகவும் சேர்த்துக் கொண்டு புதுப் பாதையில் கூடுதல் நம்பிக்கையில் பயணிக்க தொடங்கினான் ராக்கப்பன் ....."

 

   " தன் மனைவி ரமணி தான் முதல் தெய்வமாக தெரிந்தாள் ராக்கப்பனுக்கு இன்றும் என்றும் ..."

 

- சீர்காழி. ஆர். சீதாராமன் .

- 9842371679 .