tamilnadu epaper

பூக்கள்

பூக்கள்

புல் தரையின்

பனித்துளிகளில்

பிழம்பென அக்கினிக் குஞ்சுகள்❤️

 

நீ

நடந்துவரும்

தரையெங்கும்

உதிர்ந்து கிடக்கும் வெண்பாக்களென பூக்கள் ❤️

 

நீ முகர்ந்து

பார்க்கும் பூக்களெல்லாம்

பிரமிக்க வைக்கும்

அத்தரின் வாசம்❤️

 

உனது விரலிடை

ஸ்பரிசத்தில்

பரிசென மலர்களிலுருவான

மதுரம்❤️

 

உன் நிழல் படிந்த

சுவரெங்கும்

சுவனத்தின்

ஓவியம்❤️

 

ம்.. ம் உன்னைச் சுற்றி

அகிலம் போற்றும்

அண்டப்பெருவெளியில்

சுகந்தத்தின் பெருவேள்வி❤️

 

ஆர் ஜவஹர் பிரேம்குமார் ❤️ பெரியகுளம் ❤️