பெருவில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை யால் கடுமையான சேதம் ஏற்பட்டுள் ளது. இந்நிலையில் வரும் நாட்களிலும் கன மழை தொடரும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. இதனால் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 157 மாவட்டங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள் ளது. அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பிரத மர் குஸ்தவோ அட்ரியன்சன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.