வந்தவாசி, செப் 18:
திருவண்ணாமலை மாவட்டம்,
வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி மாத பிறப்பு மற்றும் பௌர்ணமி உற்சவம் முன்னிட்டு மூலவர், உற்சவர், ஆழ்வார்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பூ மாலைகள் சாற்றப்பட்டு மகா தீபாராதனை நடந்தேறியது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.