நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு. உங்களைஉறங்க விடாமல் செய்வதே கனவு.
ஏ.வி. ஜே. அப்துல் கலாம்
மனிதரில் பிறப்பால் ஒருவரை விட ஒருவர் உயர்ந்தவர் இல்லை. ஆனால் ஒழுக்கத்தால் மனிதன் உயர முடியும்.
- நபிகள் நாயகம்
வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம். தோல்வி சிந்தித்து வாழ வைக்கும்.
-இயேசு நாதர்
தட்டிப் பறிப்பவன் வாழ்த்ததில்லை!விட்டுக் கொடுப்பவன் வீழ்ந்ததில்லை!
- கவிஞர் கண்ணதாசன்
கல்வி என்பது வாழ்வில் இரண்டறக் கலந்து வாழ்வுக்குறிய பயனை அளிப்பது. அறிவையும் ஒழுக்கத்தையும் வாழ்விற்கு வழங்குவதே கல்வியின் பயன்.
- திரு.வி. க
பிறரைச் சீர்திருத்தும் கடமையை விடத் தன்னைச் சீர்திருத்துவதே முதற் கடமை
-பெர்னாட்ஷா
அனைவரையும் நேசியுங்கள் :ஒரு சிலரை மட்டும் நம்புங்கள்.
-ஷேக்ஸ்பியர்
எப்போதும் முன்னோக்கி பாய வேண்டும். நமது கால்கள் எப்போதும் முன்னோக்கி நடக்க வேண்டும்.
ஜவகர்லால் நேரு.
ஒரு தங்கமான தோழனை விட மிகவும் உயர்ந்த சொத்து வேறு எதுவும் கிடையாது.
- சாக்ரடீஸ்
இருள் நிறைந்த அறையை விட்டு வெளியே வா! ஆத்ம சக்தியுடன் அனைவரையும் நேசி. அழுக்கடைந்த ஆடை உடுத்தி இருக்கும் ஆலைத் தொழிலாளியிடமும் கடவுளைக் காண்பாய்.
-இரவீந்திரநாத் தாகூர்
சாதாரணமாகத் தோற்றமளிக்கும் மனிதர்களிடம்தான் கடவுளுக்கும் பிரியம். அதனால்தான் நிறைய பேரை அப்படிப் படைக்கிறான்.
- ஆப்ரஹாம் லிங்கன்
கடவுள் ஒருவரே என்று நம்புகிறேன். அதனால் மனித சமூகம் முழுவதுமே ஒன்றுதான் என்று கருதுகின்றேன்.
-மகாத்மா காந்தியடிகள்.
தன்னம்பிக்கை நிறைந்த ஒரு சில மனிதர்களின் சரித்திரம்தான் உலக சரித்திரம்
- சுவாமி விவேகானந்தர்
மனிதர்கள் புகழ்வதும் சீக்கிரம். இகழ்வதும் சீக்கிரம். ஆதலால் மற்றோர் உன்னைப் பற்றிச் சொல்லும் வார்த்தைகளைக்
கவனிக்காதே.
- இராமகிருஷ்ண பரமஹம்சர்
கண்ணுக்கு தெரிந்த மனிதரை மதிக்காவிட்டால் கண்ணுக்கு தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை.
-அன்னை தெரசா
எவன் தான் தவறு செய்யாதிருந்தும் பிறர் பழிச்சொல்லைப் பொறுத்துக் கொள்கிறானோ அவனே சான்றோன்.
- கவுதம புத்தர்
தேன் கூடும், கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான். காரணம், இரண்டுமே அவற்றை நிரப்பிட உழைத்தவர்களுக்குப் பயன் படுவதில்லை.
- கலைஞர் கருணாநிதி
நாடு நலம் பெற வீட்டுக்கு ஒரு நூலகம் வேண்டும்.
- அறிஞர் அண்ணா
மனிதனை அடக்கி பயன் படுத்தவே ஆண்டவன் பெண் பிறவியை படைத்திருக்கிறான்.
-வால்டேர்
தொகுப்பு
M. ராதாகிருஷ்ணன்
அஞ்சல் துறை ( ஓய்வு )
வளையாம்பட்டு போஸ்ட்
வாணியம்பாடி -635751