tamilnadu epaper

மகளிர் தொழில்முனைவோர் குழு ஆண்டு விழா

மகளிர் தொழில்முனைவோர் குழு ஆண்டு விழா


நாகர்கோவில் ஏப். 25–

குமரி மாவட்டம் சுவாமி தோப்பு வளம் பெண்கள் சிறு தொழில் முனைவோர் குழுவின் நான்காம் ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது. ப்ரோ விஷன் நிர்வாக இயக்குனர் முனைவர் ஜான்சன் ராஜ் தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை ஆலோசனை குழு தலைவர் வக்கீல் தாமரைபாரதி சிறப்புரை நிகழ்த்தினார். நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, சாமிதோப்பு ஊராட்சி முன்னாள் தலைவர் மதிவாணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பவானி நன்றி கூறினார். அகஸ்தீஸ்வரம் மருத்துவமனை சித்தா உதவி மருத்துவ ஆய்வாளர் டாக்டர் சுரேஷ், சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.