மனிதர்களே..
உலகில் ஏழை எளியவருக்கு
உதவி செய்யுங்கள்!
காலங்கள் கடந்தாலும்
உன் செயல்கள்
நாளும் நிலைத்து நிற்கும்.!
உதவி செய்தவர்களுக்கு
உள்ளன்புடன் நன்றியை
காலம் தாழ்த்தாமல்
கனிவுடன் நாளும்
கூறிப் பாருங்கள்!
மனிதர்களே....
மற்றவர்கள் குற்றம் குறைகளை
மனதில் நினைவு கொள்ளாமல்
மறந்து மன்னித்து விடுங்கள்
மன அமைதி நாளும்
உன்னைத் தேடி வரும்!
உண்மை நீ ஏற்க மறுத்தாலும்
உண்மைதான் உலகில் நிரந்தரம்
காலம் கடந்தும் மாறாது!
நேர்மை உள்ளத்தில் இருந்தால்
தர்மம் மட்டும் அல்ல
உண்மையும் தக்க சமயத்தில்
உன்னோட உயிர் காக்கும்
நாளும் மன அமைதி
உன்னைத் தேடி வரும்!
-பூ.சுப்ரமணியன்
பள்ளிக்கரணை,
சென்னை