நாள் காட்டியில்
காகிதத்தை
கிழிக்கும் போது
கவனமாய் பார்
உன்னுடைய
உழைப்பின் வேகம்
குறைந்திருந்தது
புரியும்.
நீ காலத்தை
கடக்க வில்லை
காலம்தான் உன்னை
கடந்து கொண்டிருக்கிறது.
இருட்டிலும்
வெளிச்சம் தேடு
முழு வீச்சில்
முன்னேற்றம் நோக்கி
பயணித்தால் தான்
இலக்கை உன்னால்
அடையாளம் காண
முடியும்.
இல்லையேல்
இறுதிவரை
இருட்டில் தான்
உன் வாழ்க்கை
உறுதியாய் முடியும்.
கே.எஸ்.ரவிச்சந்திரன்
மணமேல்குடி.