வண்ண வண்ணப்
பொம்மை
வஞ்சம் இல்லாப்
பொம்மை!
எண்ண எண்ண
இனிக்கும்
ஏற்ற மான
பொம்மை!
தலையை ஆட்டும்
பொம்மை
தரையில் ஓடும்
பொம்மை!
கலையில் மிளிரும்
பொம்மை
காற்றால் ஓடும்
பொம்மை!
சின்னச் சின்னப்
பொம்மை
சிங்கார மான
பொம்மை!
அன்னை யோடு
ஆட
அழகாய்க் காணும்
பொம்மை!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.