tamilnadu epaper

மழை நீருடன் விழிநீர்..

மழை நீருடன் விழிநீர்..

கண்ணுக்குள்ளே தங்கிவிடும்

கண்ணீர் துளிகள்...

நெஞ்சடைக்கும் நினைவுகள்..

நீரிலாடும் காகிதமாய்..


மனம் கனக்கும் தருணங்கள்

விடை சொல்ல மறுக்கும் விழிநீர் ..

அழுவதற்கும் இல்லை சுதந்திரம்???


திரையிட்டு மனதை மறைக்க..

முகமூடி அணிந்து கொண்டு நடிக்க..

விழிகளும் கற்றுக்கொண்டன

மனதைப் போலவே...


மழை பெய்யும் ஈர நாளில்

விழிகள் பெறுகின்றன விடுதலை..

நனையும் மழையில்,

விழிநீரும் மழை நீருடன் கலக்க ....



-தி.வள்ளி.

திருநெல்வேலி