tamilnadu epaper

மாங்காவும் மாயையும்

மாங்காவும் மாயையும்


வெளியூரில் கல்லூரியை முடித்து சொந்த ஊருக்குத் திரும்பிய யுகேஷ், பசுமை நிரம்பிய தெருக்களில் நடந்து செல்கிறான். பழைய பள்ளி வழியாகச் செல்லும்போது பள்ளி சுவரருகே கம்பளம் விரித்து மாங்கா விற்பவரைப் பார்க்கிறான். அவனது நினைவில் உடனே பள்ளி நாட்கள் வந்துவிடுகின்றன—அந்த காலத்திலேயே இந்தச் தாத்தா மாங்கா விற்றுக்கொண்டு இருந்தார்.


“இதோ பாரு ரவி,” யுகேஷ் தனது நண்பனிடம் புலம்புகிறான், “நாம் இவ்வளவு முன்னேறி விட்டோம். நகரம், வேலை, கல்லூரி… ஆனா இவர் இன்னும் அதே இடத்திலேயே இருக்கிறார். ஒரு முன்னேற்றமும் இல்லை போல இவர் வாழ்க்கையில்.”


ரவி சிரித்துக் கொண்டே சொல்கிறான், “யுகேஷ், ஒரு உண்மையை சொல்றேன் நீ நம்புவியா… அவருக்கு மாங்கா 10 அல்லது 15 விற்றா போதும், அது அவருக்கான மகிழ்ச்சி. ஆனால் நீ பார்க்காத வேறொரு முகம் இருக்கு. பள்ளி நேர இடைவெளிகளில், மற்ற நேரங்களில், அந்த ஐயா—சுந்தரம் ஐயா—இங்கே உட்கார்ந்தே பல நில ஒப்பந்தங்கள், ஆவண வேலைகள், வீடு இடம் நிலம் வாங்கும் விற்பனைகள் என பல்வேறு தரகு வேலைகள் செய்கிறார். லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். நீ இப்போது பார்க்கும் அந்த பெரிய வீடு, அந்த நிலம், அவருடைய உழைப்பின் பலன்.”


யுகேஷ் மெல்ல ஓர் உண்மையை உணர்கிறான். “நாமோ வெறும் மேல் தோற்றத்தை மட்டுமே பார்த்துக்கொண்டு மதிப்பீடு பண்ணிக்கிறோம். ஆனால் உண்மை வாழ்கை அதைக் காட்டிலும் ஆழமானது…”


மாங்கா வாசனையை விட, அந்த நிமிஷத்தில் யுகேஷின் மனதைக் கவர்ந்தது சுந்தரம் ஐயாவின் அமைதியான சாதனைகள் தான்.


-ஜனனி அந்தோணி ராஜ் திருச்சிராப்பள்ளி