என்ற முடிவோடு" இருந்தாள். மஞ்சு .

 

பத்து வயது, ஆகும் மகன் அரவிந்தையும் அழைத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டும் .

 

குமார்" />

tamilnadu epaper

மாற்றம்

மாற்றம்

இன்று குமார் வந்தவுடன்,

 

 "வெளியே போயே ஆக வேண்டும்.

 என்ற முடிவோடு" இருந்தாள். மஞ்சு .

 

பத்து வயது, ஆகும் மகன் அரவிந்தையும் அழைத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டும் .

 

குமார் உள்ளே வந்தான்

 

வெளியே போலாங்க என்று மெதுவாக ஆரம்பித்தாள்.

 

அவன் வீட்டிலேயே இருந்தால் "அவனுக்கும் போர் அடிக்கும்" நம்மளும் வேலைக்கு போயிடறோம் .

 

எனக்கும் மனசு என்னவோ போல் இருக்கு,

 

"படிக்க வேண்டிய வயசுல படிக்க வேண்டியது தானே" என்றான் குமார்.

 

எப்ப பாத்தாலும் படி ,படின்னா அப்புறம் "செல்போனை வச்சுகிட்டு விளையாட ஆரம்பிச்சிடுவான்".

 

 

ஏன்? 

 

தாத்தா கூட விளையாட வேண்டியது தானே ,

 

உங்க அப்பாவை பத்தி பேசி, என் கூட சண்டை போடுறதே, உங்க வேலையா போச்சு இப்ப வெளிய கூட்டிட்டு போறீங்களா ?இல்லையா .

 

இனிமேல் மறுத்து பேசினால் ,

 

வீடு ரணகளப்படும் என்று இருவரையும்,கடற்கரைக்கு அழைத்து சென்றான்.

 

அரவிந்துக்கு," கடல் அலையில் விளையாடி ,மணல் வீடு கட்டி ,

ஒரே சந்தோஷம் .

 

நேரம் போனதே தெரியவில்லை .

 

மனசுல பாரம் குறைந்து மனசெல்லாம் லேசா ஆயிடுச்சு , 

 

சரிங்க நேரம் ஆகுது, 

 

மாமாவுக்கு போன் பண்ணி, காலையில உள்ள இட்லி இருக்கு சாப்பிட்டு படுத்து தூங்க சொல்லுங்க ,

 

நாம அப்படியே, "ஹோட்டல்ல போய் சாப்பிட்டு போயிடுவோம் .

 

அரவிந்த் 

 

அம்மா, அப்பாவை பார்த்து கேட்டான் தாத்தாவும் தனியா தானே இருக்காங்க

 

 அவங்களுக்கும் ஒரு மனமாற்றம் வேண்டும் தானே,

 பக்கத்து வீட்டு தாத்தா வந்து பேசினா கூட சண்டை போடுறீங்க,

 

நம்ம மூனு பேரும் வெளியே வந்தடுறோம், தாத்தா தனியாவே எவ்வளவு நேரம் தான் இருப்பாங்க, 

அரவிந்த் சொல்ல , சொல்ல "மஞ்சுவின் மனதிற்குள் சுருக்கு என்று தைத்தது "

 

மறுநாள் காலை,

சமையல் பண்ணும் போது பாட்டு கேட்டுக்கொண்டே சமைப்பாள் .

அந்த ரேடியோவை எடுத்து மாமாவின் அறையில் வைத்தாள்.

 

வேலைக்கு செல்ல வெளியே வந்ததும் ,

பக்கத்து" வீட்டு தாத்தாவை போய் பார்த்து மாமா உங்களை கூப்பிடுறாங்க" என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.

 

மஞ்சுவின் "மனமாற்றத்தை பார்த்து குமார் புன்னகை" செய்தான் .

 

முற்றும்.

 

சங்கரி முத்தரசு ,

கோவை.