tamilnadu epaper

முதுமை

முதுமை

அந்த முதியவருக்கு 

 வயது 73. மாதந்தோறும் ஓய்வூதியம் வாங்கியதும் அவரே கடைவீதிக்குச் செல்வாா். 

 

முதலில் மருந்து கடைக்கு சென்றதும் கடையிலிருந்த பெண், "வாங்கா தாத்தா என்ன வேணும்? ' என்று வரவேற்றார்.

 

 அடுத்து டிபார்ட்மெண்டல் ஸ்டோர். பொருள்களை வாங்கிக்கொண்டு பணத்தைச் செலுத்திய போது அங்கிருந்த, "பெண் அப்பா ஐந்து ரூபாய் சில்லறை இருக்குமா?" என்றார்.

 

 மூன்றாவதாக புத்தக கடை. பேரன்களுக்கு குறிப்பிட்ட பிராண்ட் பேனா பென்சில்கள் என தேடித்தேடி வாங்கினார். எல்லாவற்றையும் பொறுமையாக கொடுத்த பெண், " இன்னும் என்ன வேணும் அண்ணா? " என்றார்.

 

 நான்காவது ஸ்வீட் ஸ்டால். உருளைக்கிழங்கு சிப்ஸ் பேரன்களுக்கு பிடிக்கும் என வாங்கினாா். கடைப் பெண், " சூடாக பக்கோடா இருக்கிறது வேணுமா அங்கிள்" என்றார். 

 

தாத்தா , அப்பா, அண்ணா, அங்கிள் என ஒவ்வொரு ஒவ்வொருவா் பார்வையிலும் வெவ்வேறு உறவாக தெரியும் தனது முதுமை பருவம் குறித்து அவருக்குப் பெருமிதம் ஏற்பட்டது.

 

கடைப் பெண்களுக்கோ வாடிக்கையாளர்களை எப்படி அழைத்தால் வியாபாரம் பெருகும் என முதலாளி கொடுத்த பயிற்சியை கச்சிதமாக கடைபிடித்த திருப்தி

ஏற்ப்பட்டது.

 

 ௧. ரவீந்திரன்.

ஈரோடு 638002