போடணும்ன்னு சொன்னீங்க ஏற்பாடு
பண்ணீடீங்களா..."" />
ஒரு தமிழ் இலக்கிய சந்திப்பு முடியும் தருவாயில், " என்ன வைரவன், கவிதை தொகுப்பு போடணும்ன்னு சொன்னீங்க ஏற்பாடு பண்ணீடீங்களா..." சக எழுத்தாளர் கதிரவன் கேட்க, "பதிப்பகத்துல இத பத்தி கேட்டேன் நூறு பிரதிகள் போட ஐயாயிரம் செலவாகும்ன்னு சொல்லிட்டாங்க ... பணம் ஏற்பாடு பண்ணனும் ..." வைரவன் சொன்னவுடன் 'இப்பதான், தான் எழுதிய ' இல்லாமை இல்லாமல் போக' என்ற கவிதை தொகுப்பிற்கு தமிழ்நாடு அரசு விருதும், இருபத்தைந்தாயிரம் ரொக்க பரிசும் கிடைச்சது... அந்த பணத்துல அடுத்த கவிதை தொகுப்பு போடலாம் ... ஆனா கைல பணம் இல்லாதது போல பணம் ஏற்பாடு பண்ணனும்ன்னு சொல்றாரு...' கதிரவனின் மனதில் கேள்விக் கனைகளோடு வீடு திரும்பினார். உண்மையில் வைரவன் ஒரு ஏழை கவிஞர். நல்ல மனிதர். முற்போக்கு சிந்தனையாளர் . மற்ற எழுத்தாளர்கள் போல் எழுதுவது ஒன்று வாழ்க்கையில் கடை பிடிப்பது வேறு என்று இல்லாமல் வைரவனின் எழுத்தும் எண்ணமும் ஒன்றாய் இருக்கும். இப்படிப்பட்ட யதார்த்தமான நல்ல கவிஞனுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கதிரவனின் மனதில் பட்டது. ஒரு நாள் வைரவனை நேரில் சந்திக்க அவர் வீட்டிற்கு சென்றார். வாசலை நெருங்கியபோது உள்ளே ஒரு பெண்ணின் விசும்பல் சத்தம் கேட்டது. "நீ ஒன்னும் கவல படாத, எதும் யோசிக்காம இந்த இருபத்தைந்தாயிரம் பணத்த வாங்கிக்க மேற்கொண்டு தேவப்பட்டா சமாளிப்போம்..."ஒரு விதவைப் பெண்ணின் ஒரு வயது குழந்தையின் மருத்துவ செலவுக்கு உதவி செய்து கொண்டிருந்த வைரவனின் பெரிய மனதை நினைத்தும், உண்மையில் வைரவன் முற்போக்கு சிந்தனைவாதி என்றும் அவருடைய எழுத்தும் எண்ணமும் ஒன்றுதான் என்பதை நிரூப்பித்துவிட்டதை நினைத்தும் கதிரவன் பெருமைப்பட்டார். -சுகபாலா, திருச்சி. Breaking News:
முற்போக்கு