மெக்சிகோ பகுதியில் எம்கியூ-9 ரீப்பர் ரக டிரோன்களை அமெரிக்க உளவுத் துறை நிலை நிறுத்த துவங்கியுள்ளது. போ தைப்பொருள் கடத்தல் கும்பல்கள் பயங்கரவா திகளை கண்காணிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதி. அவர்கள் மீது திடீர் தாக்குதலை கூட அமெ ரிக்கா நடத்தலாம் என கூறப்படுகின்றது. எனி னும் மெக்சிகோவை அமெரிக்கா ஆக்கிர மிக்கும் என டிரம்ப் மிரட்டி வருகின்ற நிலையில் மெக்சிகோ மீது திடீர் தாக்குதல் நடத்த திட்டமா என கேள்விகள் எழுந்துள்ளன.
ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்ப ஐரோப்பா திட்டம்
உக்ரைனுக்கு சுமார் 30 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெ ரிக்காவின் வீரர்களை உக்ரைனுக்கு அனுப்ப மாட்டோம் என அறிவித்துள்ள நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. உக்ரைன்- ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட வில்லை. மேலும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் போரைத் தீவிரப்படுத்த திட்டமிடும் நிலையில் வீரர்களை அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது.