ஏமாற்றுவதும்
ஒரு வகையில் துரோகமே என்றாலும்
வெவ்வேறு வடிவங்களில் வந்து
ஏமாறுவது வாடிக்கையானது.
வேடிக்கை என்ன வெனில்
அதிகாலையில் செய்யின்
அந்தி மாலையில் முடிவு தெரிந்து விடுகிறது.
ஏமாற்றியது
துரோகத்தின் வகையாக
வகமைப்படுத்த முடிகிறது.
பின்னங்களை
கூறு போட்டு
பாசத்துடன் ஒட்டினாலும்
தெரிய வருவதோ
மாற்று வேஷம்.
அவரவர்
செய்கையின் வெளிப்பாடாகவே
ஏமாற்றமும்
துரோகமும் பயணிக்கின்றது...
காட்டிக் கொடுக்கும்
எட்டப்பர்கள்
இங்கு
தேவை இருக்காது.
திரைக்குப் பின்னால்
இருந்து கொண்டு
வேலையை கச்சிதமாக முடக்கி விட்டு
நட்டத்தை
சந்தித்து விட்டால்
வெற்றி
துரோகிகளின் பக்கமே.
இவற்றையெல்லாம்
மெல்லக் கடந்து போகையிலே...
நினைத்ததை முடித்து விட்டு
யதார்த்தங்களில்
தெரிகிறது
யாருமற்ற வெளிக்கான பாதை.......
-எறும்பூர் கை.செல்வகுமார்,
செய்யாறு .