திருநங்கைகளுக்கும் ட்ரம்புக்கும் என்ன பிரச்சனையோ தெரியவில்லை, மூன்றாம் பாலினத்தவரை கண்டாலே அவர் வெறுக்கிறார். அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று மிரட்டுகிறார். இதனால் அமெரிக்காவில் இருந்து பல மூன்றாம் பாலினத்தவர் இங்கிலாந்துக்கு சென்று விட்டனர்.
தஞ்சம் புகுந்த நாட்டிலும் அவர்களுக்கு தலைவலி ஆரம்பித்துவிட்டது. மூன்றாம் பாலினத்தவரை அங்கீகரிக்க முடியாது என்று கூறிய இங்கிலாந்து அவர்களை ஆண் அல்லது பெண் என்ற இரண்டு வரையரைக்குள் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு உத்தரவிட்டது.
எனவே அவர்களில் பெரும்பாலானோர் தங்களை " பெண் " என்ற வரையறைக்குள் பதிவு செய்து சான்றிதழ் பெற்றுவிட்டனர் .
பெண்களுக்கான வேலை வாய்ப்புகளிலும் அவர்களில் பலர் அமர்ந்து விட்டனர். இதைக் கண்டு வெகுண்ட பெண்கள் அமைப்பினர்
தங்களுடைய உரிமைகளை பெண்கள் என்ற பெயரில் மூன்றாம் பாலினத்தவர்கள் பறிப்பதாக நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்துள்ளனர்.
அந்த வழக்கில் மூன்றாம் பாலினத்தவரை ஆண் என்றோ பெண் என்றோ அங்கீகரிக்க முடியாது என்று இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பளித்து விட்டதுடன்
அவர்களுக்கு பெண் என்று கொடுக்கப்பட்ட அத்தனை அங்கீகார சான்றிதழ்களையும் ரத்து செய்து விட்டது.
இப்போது இங்கிலாந்தில்
இருக்கும் திருநங்கைகள் " .நான் யார் .....நான் யார் ........ நான் யார் ........ ? " என்று கேட்டுக்கொண்டு திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கிறார்கள். பாவம் அவர்கள் மூன்றாம் பாலினத்தவராக பிறந்தது யார் குற்றம் ? கடவுளின் குற்றமல்லவா ? இயற்கை செய்த குற்றத்துக்கு மனிதரை தண்டிக்கலாமா ?
சோதனை முயற்சியாக ரயிலில் ஏடிஎம் எந்திரத்தை நிறுவி இருக்கிறது ரயில்வே துறை. இது இந்திய ரயில்வே துறையில் ஒரு மாபெரும் மைல்கல்.
இணையதளத்தில் ரீல்ஸ் வெளியிடுவதற்காக ஆபத்தான முறையில் கங்கை நதியில் வீடியோ எடுத்த ஒரு பெண் தவறி நதியில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டார் என்ற செய்தி
துயரத்தையும் அத்துடன் அலட்சியமாக தங்கள் உயிருடன் விளையாடும் இளைய தலைமுறையினர் மீது தீராத கோபத்தையும் ஏற்படுத்துகிறது.
தமிழக பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் சாம்பார் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. பொதுவாக உப்புமாவை பெரும்பாலானோர் விரும்புவதில்லை.
பாவம் குழந்தைகள் வேறு வழியில்லாமல் இதுவரை சாப்பிட்டு வந்திருக்கிறார்கள். இனிமேல் அவர்களுக்கு அடிக்கிறது யோகம்.
-வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்