வணக்கம்
18.04.2025 'தமிழ்நாடு இ பேப்பர். காம்' வழக்கம் போல் அனைத்துச் செய்திகளையும் தாங்கிய நாளிதழாக வெளிவந்திருக்கிறது.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மற்றும் ஏஐ திறன் கொண்ட புதிய தரவு மையம் சென்னலயை அடுத்த சிறுசேரியில் அமைந்த மையம் தமிழகத்துக்கு கிடைத்த கொடை.
சட்டீஸ்கரில் நடைபெற்ற என்கவுண்டரில் இரண்டு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டிருப்பது சிறந்த நடவடிக்கைகளில் ஒன்று.
உடல் எடையைக் குறைக்க 'ஸ்கின்னிடாக்' ஆலோசனை ஆபத்தானது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை செய்து விழிப்புணர்வைத் தூண்டியிருப்பது அவசியமான ஒன்று. யூடியூப்பர்களின் ஆலோசனை அட்டகாசங்கள் அதிகரித்து மக்களைக் குழப்புகிறது.
வேலை பார்த்து சோர்வு அடைந்து விட்டேன் என்று 42 வயதில் ஒருவர் 2.5 கோடி சேமிப்புடன் ஓய்வு பெறலாமா என்று கேட்டிருப்பது இன்று வேலை பார்க்கும் அநேகம் பேரின் எண்ணக்கிடக்கையாக இருக்கிறது. பணிச்சுமை அதிகரித்து ஓய்வின்றி இருக்கும் போட்டி மிகு உலகில் இருக்கிறோம். நேற்று முன்தினம் வேலைப்பளு மற்றும் தன்னை எப்படி நடத்தினார்கள் என்பதற்காக டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம் கொடுத்தது மற்றும் சற்று நாட்களுக்கு முன் ஒருவர் மூளை நரம்பு இரத்த கசிவுக்கு ஆளானதும் இதேபோன்ற காரணங்களே.
தமிழறிஞர்கள் மற்றும் அகவை மிகுந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகையை உயர்த்தி இருப்பதற்கு தமிழக அரசுக்கு பாராட்டுகள்.
மெய்ப்பொருள் நாயனாரின் பக்தியை போற்றுவோம்.
ராம்நாத் கோயங்கா தினமணியின் தமிழ்பதிப்புதான் மற்ற மொழிகளில் வெளிவரக் காரணமாக இருந்தது என்று கூறியது நமது தமிழ் மொழிக்கு கிடைத்த பேறு.
தெய்வீக அருள் தரும் ஆன்மீகக் கட்டுரைகள் அனைத்தும் சிறப்பு.
முருங்கைப் பூவின் அற்புதங்கள் அத்தியாவசியமான கட்டுரை. முருங்கை வைத்தவன் வெறுங்கையோடு போக மாட்டான் என்பது சொலவடை.
சென்னை பட்ஜெட் டிரிப் சென்னை செல்லும் சுற்றுலா பயணிகளிக்கான கையேடு.
-தாணப்பன் கதிர்
( ப. தாணப்பன் )