பாட்டி கதை சொல்லி அலுத்தாள்
வாரிசுக்கு வரைய அலாதி பிரியம்
சித்திரமும் கைப்பழக்கம் பழமொழி
தனக்கதில் ஆர்வம் இல்லாவிடிலும்
சிறுமிக்கு ஒத்தாசையாய் அமர்வதில்
மனநிறைவும் ஆனந்தமும் அள்ளும்
தன் குற்றம் குறைகளைப் பகிர்வாள்
தக்க தீர்வைப் பெற்று குதூகலிப்பாள்

-பி. பழனி,
சென்னை.