tamilnadu epaper

வீரப்பெண்ணே!

வீரப்பெண்ணே!


அடுப்பூதும் பெண்ணுக்கும்

ஆயுதம் ஏந்துகிற

வலிமையுண்டு.


முறம் கொண்டு

புலி விரட்டிய

மங்கையர் வாழ்ந்த

மண்இது‌


இன்று

இராணுவத்திலும்

இரும்புப் பெண்கள்

இருக்கின்றார்கள்

பயங்கரவாதிகளை

அழிக்க

பாவையர் போதும்

என்பதை

நிரூபித்துவிட்டார்கள்


ஆபரேஷன்சிந்தூரில்

இரண்டு

வீரப்பெண்களால்

வீழ்த்தப்பட்டது

தீவிரவாதம்.


இந்த

அமைதியான பூமியில்

அஹிம்சையோடு

வாழ்ந்து விட்டுப்போ

மறந்தும்

ஆயுதங்களோடு

நுழைந்தால்

உன்னை அழிக்க

ஆயிரம் பேர்

தேவையில்லை

இந்த

இரண்டு பெண்களே

போதும்

உனக்கு

இறுதி

ஊர்வலம் நடத்த...!



-கே.எஸ்.ரவிச்சந்திரன்

மணமேல்குடி.