tamilnadu epaper

புகையும் பூதமும்!

புகையும் பூதமும்!


அலாவுதீனும்

அற்புத விளக்கும்

காமிக்ஸ் புத்தகத்துடன்

விளக்கு ஒன்றை

இலவசமாக கொடுத்தார்கள்

வாங்கிய சிறுவன்

அதை சுவற்றில்

நன்றாக தேய்த்துப் பார்த்தான்

புகை வந்தது

புகை வந்தால்

பூதமும் வருமென்று

இன்னும் வேகமாக

தேய்த்தான்

அப்போது விளக்கு

கையை சுட்டது

அப்போதுதான் அவனுக்கு

இது உராய்வால்

வரும் வெப்பமென்று

புரிந்தது!


-சின்னஞ்சிறுகோபு,

  சிகாகோ.