tamilnadu epaper

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-18.04.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-18.04.25


 அன்புடையீர்,


வணக்கம். 18.4.25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர்.காம் முதல் பக்கத்தில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது இன்றைய பஞ்சாங்கம் மிக அருமையான வெள்ளிக்கிழமையை எனக்கு அழகாக தொகுத்து கொடுத்தது. 


இன்றைய திருக்குறள் மிகவும் அருமை. பொருளுடன் படிக்கும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி அலை வந்து வந்து சென்றது திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் பங்குனி உத்திர கல்யாணம் கண்கொள்ளா காட்சியாக பார்த்து மகிழ்ந்தேன்.  


பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் அருமையான காட்சியாக எனக்குத் தெரிந்தது. நலம் தரும் மருத்துவம் பகுதியில் பருப்பு கீரையில் உள்ள சத்துக்கள் பற்றியும் அதை சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்றும் மிக தெளிவாக சொன்னது அருமையான தகவல் பாராட்டுக்கள்.


 தங்கம் 71 ஆயிரம் ரூபாய் தொட்டது என்று அதிர்ச்சியான செய்தியை வருத்தத்துடன் படித்தேன். 


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வந்த ராம்நாத் கோயங்கா அவர்களின் வரலாறும் படமும் வரலாற்று செய்தியாக படித்து மகிழ்ந்தேன். புதுக்கவிதை பக்கங்களில் வரும் ஒவ்வொரு கவிதையும் மிகவும் அருமை. ஒவ்வொரு வரியையும் படிக்கும் போது ஒரு புது கவிஞர் உண்டாகி என்னுடன் பேசுவது போல் உள்ளது பாராட்டுக்கள்.


பல்சுவைக் களஞ்சியம் பகுதி மிகவும் அருமை அதில் வந்த முருங்கைப் பூவின் அற்புதங்கள் நல்ல தகவல் இதை படிக்கும்போது வீட்டில் உள்ள முருங்கைப்பூவை நாம் எப்படி எல்லாம் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம் என்ற ஒரு வழியை சொல்லிக் கொடுத்தது போல உணர்ந்து மகிழ்ந்தேன். ஆரோக்கியமாக வாழ உதவும் மண்பானை சமையல் மண் பானையில் சமைப்பதன் அருமை பெருமைகளை அழகாக சொன்னது பாராட்டுக்குரியது.


தெய்வீக அருள் தரும் ஆன்மீகம் என்ற பக்கத்தில் வந்த விநாயகர் வழிபாடு மற்றும் அனுமனின் தாகம் தீர்த்த முருக பெருமான் என்ற செய்தியும் மிகவும் அருமை படிக்கும்போது உடலும் உள்ளமும் புல்லரித்தது.


 தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா என்ற செய்தி படத்துடன் பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருந்தது.


சுற்றுலா என்ற தலைப்பிட்டு சென்னைக்கு அருகே உள்ள பட்ஜெட் ட்ரிப் என்றும் அதில் தரமான ட்ரக்கிங் ஸ்பாட் என்று மிக அருமையான தகவலை சொல்லி சென்னை செல்லும் போது இந்த இடத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டிய நல்ல தகவல்.


கோடைகாலத்தில் மிக அதிகமாக கிடைக்கும் தர்பூசணியில் எங்கும் ரசாயன கலப்பு இல்லை என்ற உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் சொன்னது மிகவும் நல்ல தகவல்.


சபரிமலை அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற கேரள பஸ் மீது மரம் விழுந்து விபத்து என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது விளையாட்டு செய்திகள் மிகவும் அருமை


கடைசி பக்கத்தில் உலகத்தில் உள்ள நாடுகளில் அத்தனை நிகழ்வுகளின் அழகாக படம் பிடித்து காட்டுவது பாராட்டுக்குரியது வர்த்தகப் போரின் விளைவு என்று அமெரிக்காவில் 32 லட்சம் அதுவே சீனாவில் வெறும் ஒரு லட்சம் என்ற வைரல் வீடியோ பற்றி படித்ததும் அதிர்ச்சியாக இருந்தது. 


விடியலுக்கு சந்தோச அச்சாரமிடும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு சந்தோஷமான பாராட்டுக்கள்.


நன்றி 

-உஷா முத்துராமன்