tamilnadu epaper

வலங்கைமான் கீழத்தெரு பொன்னியம்மன் என்கிற எல்லைப் பிடாரி அம்மன் ஆலயத்தேர் திருவிழா

வலங்கைமான் கீழத்தெரு பொன்னியம்மன் என்கிற எல்லைப் பிடாரி அம்மன் ஆலயத்தேர் திருவிழா

வலங்கைமான் கீழத்தெரு பொன்னியம்மன் என்கிற எல்லைப் பிடாரி அம்மன் ஆலயத்தேர் திருவிழா நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கீழத்தெருவில் பொன்னியம்மன் என்கிற எல்லைப் பிடாரி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வருடந்தோறும் சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கமான ஒன்று. இவ்வாண்டு கடந்த 15-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி, தினசரி பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா காட்சி நடைபெற்றது. விழாவில் நேற்று முன்தினம் 22- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பொன்னியம்மன் என்கிற எல்லைப் பிடாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி வானவேடிக்கையுடன் வீதியுலா காட்சி நடைபெற்றது. நேற்று 23- ஆம் தேதி புதன்கிழமை இரண்டாவது நாளாக தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று 24- ஆம் தேதி வியாழக்கிழமை மதியம் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், விடையாற்றி விழாவும் நடைபெற்றது.


தேர்த்திருவிழா ஏற்பாடுகளை வலங்கைமான் கீழத்தெருவாசிகள், எல்லையம்மன் கோயில் தெருவாசிகள், உப்புக்காரத் தெரு வாசிகள், பாய்க்காரத் தெருவாசிகள் உள்ளிட்டோர், நகரவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.