tamilnadu epaper

வாசகர் கடிதம் -20.04.25

வாசகர் கடிதம் -20.04.25

இன்றைய தமிழ்நாடு இ பேப்பரில் காதலின்‌ பொன்வீதியில் தொடர் ஆரம்பித்த நாளான 23-03-2025 முதல் வாராவாரம் படித்து வருகிறேன். தொடர் முதல் அத்தியாயத்தில் இருந்து விறுவிறுப்பாகவும், எதிர்ப்பார்ப்புடனும் செல்கிறது‌ அதில் இந்த‌வாரம் ஹைலைட் என்னவென்றால் வில்லனாக வரும்‌ நாகராஜ் உடன் ருத்ரமூர்த்தியின் மருமகனாக வரும் சந்தோஷ்ம் சேர்ந்து ருத்ர மூர்த்திக்கு எதிராக சதித்திட்டம் போடுவதும் அதனை முறியடிக்க ருத்ரமூர்த்தி போலிஸில் புகார் செய்து அவர்களை இன்ஸ்பெக்டர் பின் தொடர்கிறார் என்று போலிஸ் உயரதிகாரி உத்திரவாதம் தருவதும்

இந்த வார தொடரை முடித்ததை பார்க்கும் போது சினிமாவில் வருவது போல் ஹீரோ & வில்லன்களுக்குள் டுவிஸ்ட் வைத்து ஒருவருக்கொருவர் ஒன்றும் சலைத்தவர்தள் இல்லை என்பது நமக்கு புரிய வைப்பதுடன் ருத்ரமூர்த்திக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்று பதறும் என்னைப் போன்று தொடரினை தொடர்ந்து படிக்கும் வாசகர்களுக்கு சற்று நிம்மதியை அளிக்கும் வகையில் தொடர்கதையை சினிமா திரைக்கதையைப்போல்‌ எழுதி வருவது மிகச் சிறப்பு. தொடரட்டும் உங்கள் சேவை.‌ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்...