tamilnadu epaper

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) - 11.05.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) - 11.05.25


அன்புடையீர்,


வணக்கம். தமிழ்நாடு இ பேப்பர் 11.5.25 அன்றைய நாளிதழுடன் கொடுக்கப்பட்ட சினித்துளி மிகவும் அருமை திரையுலகத்தில் உள்ள அனைத்து செய்திகளையும் அழகாக தொகுத்து கொடுத்தது ஒரு திரைப்படம் பார்த்தது போன்ற ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது.


முதல் பக்கத்தில் போர் நிறுத்தம் அறிவித்த பின்பும் தொடரும் போர் என்று செய்தி அதிர்ச்சியாக இருந்தது. இன்றைய பஞ்சாங்கம் மிக அழகான நாளாக எனக்கு வகுத்துக் கொடுத்தது.


இன்றைய திருக்குறள் மிகவும் அருமை பொருளுடன் படித்து மிகவும் மகிழ்ந்தேன். இன்று சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்லும் நேரம் என்று அழகாக குறிப்பிட்டது கிரிவலம் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது. சித்திரை வசந்த உற்சவ தீர்த்தவாரி என்ற செய்தி மிகவும் அருமை.


பள்ளிகள் திறக்க இருக்கும் இந்த நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொடுப்பதற்காக பல கோடி ரூபாய் பாட புத்தகங்கள் தயார் என்ற செய்தி ஆர்வமுடன் படிக்க வைத்தது. நலம் தரும் மருத்துவம் பகுதியில் வந்த புற்று நோய்க்கு மருந்தாகும் காளான் என்று புதிதாக கண்டுபிடித்ததை பற்றி தெரிந்தது மிகவும் நல்ல தகவல் என்று ஆசையாக படிக்க வைத்தது.


அரசியல்.in என்ற செய்தி மிகவும் அருமை இன்றைய அரசியலை மிக அழகாக படம் பிடித்து காட்டியது. நமக்கு நாமே திட்ட நிதி ஒதுக்கீடு பல கோடி ரூபாயாக உயர்வு என்ற செய்தி ஆர்வமுடன் படிக்க வைத்தது.


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் இன்று ஜி. எஸ். லக்ஷ்மண அய்யர் அவர்களின் வரலாறு மிகவும் அருமை. நல்ல வரலாற்று செய்தியாக இருந்ததால் ஆர்வமுடன் படித்து ரசித்தேன்.


பல்சுவை களஞ்சியம் பகுதி மிகவும் வழக்கம் போல் அருமையாக இருந்தது. விடுகதையும் ஜோக்ஸும் என்னை மறந்து சிரிக்கவும் ரசிக்கவும் வைத்தது.


.ஜோதிடம் அறிவோம் பகுதியில் வந்த அனைத்து தகவலும் மிகவும் அருமை. ஜோதிடம் சொல்லும் ரகசியம் வளையல் அணிவதால் ஏற்படும் நன்மைகளைப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. நல்ல நல்ல தகவல்களை அழகாக கொடுக்கும் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.


கோடை வாட்டி வதக்கும் இந்த நேரத்தில் கோடை காலத்தில் தண்ணீர் பலந்தலை குன்றக்குடி அடிகளார் துவக்கி வைத்தார் என்ற செய்தியும் படமும் மிகவும் அருமையாக இருந்தது. குடவாசல் அருகே 48 வருடங்களுக்குப் பிறகு சுற்றி வந்த ஸ்ரீ பிடாரியம்மன் மிகவும் அற்புதமான தகவல். ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் சேவை கண்ணுக்கு மகிழ்ச்சியாக பார்க்க வைத்தது.


சலங்கை நாதம் 2025 மற்றும் கைவினைப் பொருட்காட்சி செய்தி தஞ்சாவூரில் நடப்பதை பார்த்தவுடன் போக வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. மிக அருமையான தகவல் மனமார்ந்த பாராட்டுக்கள்.


வடக்கே நடக்கும் போரின் நிலைமையை மிக அழகாக படங்களுடன் படிக்கும் போது பயமாக இருந்தாலும் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை நேரில் பார்ப்பது போல ஒரு வியப்பு வருவது உண்மை.


ஆண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை என்று விருதாச்சலத்தில் விதி மீறி நடந்த அதிகாரிகள் பற்றிய செய்தி அதிர்ச்சியான தகவலாக இருந்தது.


விளையாட்டு கார்னர் மிகவும் அருமை விளையாட்டு செய்திகளை ஆர்வமுடன் படித்து ரசித்தேன்.


கடைசி பக்கத்தில் உலகில் நடக்கும் அனைத்து நாடுகளின் நிகழ்ச்சிகளை மிக அழகாகத் தொகுத்து கொடுப்பது பாராட்டுக்குரியது. ரகசிய உறவு அமெரிக்கா மீது டென்மார்க் குற்றம் சாட்டியதை படித்ததும் இப்படியும் கூட நடக்குமா என்று ஆச்சரியமாக இருந்தது.


மொத்தத்தில் சத்தமின்றி அனைத்து பக்கங்களையும் ஆவலுடன் படித்து இன்றைய உலகத்தையே வலம் வந்து விட்டேன். இதற்கு உதவிய தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 


நன்றி 

உஷா முத்துராமன்