tamilnadu epaper

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-14.04.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-14.04.25


 அன்புடையீர்,


வணக்கம். 14/4/25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்னதை பார்த்து மகிழ்ந்து நானும் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு என்று மகிழ்ச்சியுடன் நவில்கிறேன். முதல் பக்க அரசியல் செய்திகள் தமிழக அரசியலை அழகாக தெளிவாக புரியும் படி சொன்னது பாராட்டுக்குரியது. இன்றைய பஞ்சாங்கம் இன்றைய நாளை தமிழ் புத்தாண்டு பிறப்பினை மிக சிறப்பாக கொண்டாட உதவியது ஏப்ரல் 17ஆம் தேதி வரை வெப்ப அலைக்கு வாய்ப்பு என்ற செய்தி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உள்ளுணர்வு சொன்னது. இன்றைய திருக்குறள் மிகவும் அற்புதம். நல்ல பொருளுடன் அழகாக படித்து மகிழ்ச்சி அடைய வைத்தது. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவச வகுப்பு என்ற செய்தி ஆர்வமுடன் படிக்க வைத்தது. மரக்கன்றுகள் நடும் விழா என்று செய்தியை பார்த்தவுடன் மரங்கள் நிறைவே வளர்ந்து மழை பெய்து நாடு சுபிட்சமாக இருக்கும் என்று மனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. இன்றைய நலம் தரும் மருத்துவம் பகுதியில் பேரிக்காயும் அதன் பயன்களும் மிகவும் அருமை. பேரிக்காய் தேடி சாப்பிடுவேன். தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் பாபா சாஹிப் அம்பேத்கர் என்று அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளன்று அவருடைய வரலாறு படிக்க மகிழ்ச்சியாக இருந்தது. சட்டங்களில் பலத்திருத்தங்களை கொண்டு வந்த அம்பேத்கர் பற்றிய வரலாற்று செய்தி சூப்பர். பல்சுவை களஞ்சியம் பகுதியில் வந்த சோம்பேறித்தனம் பற்றி படித்தது உண்மை என்று உணர்ந்தேன். மீம்ஸ் மிக அருமையாக இருந்தது. பன்முகம் பக்கத்தில் வந்த அனைத்து செய்திகளும் மிகவும் அருமை. தென்னாங்கூரில் அருள்மிகு குருவாயூரப்பன் அலங்காரம் தரிசனம் என்று திருவண்ணாமலையில் நடந்த அந்த கடவுளை பற்றி படித்ததும் புல்லரித்தது. சுற்றுலா என்ற தலைப்பிட்டு கோவையில் நாம் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களை பட்டியலிட்டது மிகவும் அருமை. தமிழ் புத்தாண்டு சிறப்பு ராசி பலன் மிக அருமை இந்த வருடம் எப்படி இருக்கும் என்று மிக அழகாக சொல்லி என்னை உற்சாகப்படுத்திய ராசிபலன். மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது லாரியிலிருந்து குதித்து சிங்கப்பூரில் தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை மீட்ட தமிழரின் பரபரப்பு பேட்டி என்ற செய்தி உற்சாகமாக படிக்க வைத்தது எல்லா பக்கங்களும் நல்ல செய்திகளாக கொடுத்து தமிழ் புத்தாண்டினை மிகச் சிறப்பாக கொண்டாட உதவிய தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்தின் அயராத பணிக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.உங்கள் பணி இது போல் என்றென்றும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.


 நன்றி 


-உஷா முத்துராமன்