tamilnadu epaper

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-15.04.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-15.04.25


அன்புடைவீர்,


 வணக்கம். 15.4.25 அன்று தமிழ்நாடு இ பேப்பர்.காம் முதல் பக்கத்தில் நம் தமிழக முதல்வரின் சூளுரை பற்றி படித்தது இன்றைய அரசியல் நன்றாக தெளிவாக புரிந்தது. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது. இன்றைய பஞ்சாங்கம் மிக அருமையான நாளாக எனக்கு அமைந்து நல்ல நல்ல செய்திகளை அழகாக எடுத்துச் சொன்னது மனம் நிறைந்த பாராட்டுக்கள். திருக்குறள் மிகவும் அருமை அதைப் பொருளுடன் படிக்கும்போது இதுவரை 229 திருக்குறளை படித்து விட்டோமே என்ற ஒரு சந்தோஷம் வந்தது. சுரைக்காயின் மருத்துவ குணங்கள் என்று நலம் தரும் மருத்துவம் பகுதியில் சுரைக்காய் பற்றியும் அதன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளும் மிக அழகாக தெளிவாக சொன்னது ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றது போல ஒரு மனநிறைவை தந்தது. சென்னையில் உள்ள ஐ சி எப் ஆலையில் வந்தே பாரத் பார்சல் ரயில் தயாரிப்பு பணி தீவிரம் என்ற செய்தி ரயில்வே செய்திகள் மீது இருந்த ஆர்வத்தை அதிகப்படுத்தியது. தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் பி எஸ் பி பொன்னுசாமி அவர்களின் வரலாறு மிகவும் அருமை. நல்ல அருமையான தலைவர்களை பற்றி அழகாக தொகுத்து கொடுக்கும் இந்த பகுதி ஆர்வமுடன் படிக்க வைப்பது தான் உண்மை. பல்சுவை களஞ்சியம் பகுதியில் வந்த தைரியம் அவசியம் என்ற தத்துவம் நிறைந்த குட்டிக்கதை மனதிற்கு தைரியத்தை கொடுத்தது. அதில் வந்த மீம்ஸ் விடுகதை ஜோக்ஸ் எல்லாமே மிகவும் அருமையாக இருந்தது. சமையலறை ஸ்பெஷல் பகுதியில் வரும் அனைத்து செய்திகளும் மிகவும் அருமை முட்டைக்கோஸ் சாலட் என்றும் உணவு சமைக்கும் போது நாம் எப்படி இருக்க வேண்டும் என்றும் மிக அருமையாக தெளிவாக சொல்லி எங்களுக்கு ஒரு விழிப்புணர்வை கொடுக்கும் தமிழ்நாடு இ பேப்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பிள்ளையார்பட்டி யில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி என்ற செய்தியும் படமும் ஆர்வமுடன் படிக்க வைத்தது அந்த பக்கத்தில் வரும் அனைத்து கடவுள் பற்றிய செய்திகளும் ஆசையாக பார்க்க வைக்கிறது திருநெல்வேலியில் சுற்றுலா சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் என்று மிக அருமையான ஒரு தகவலை சொன்னது பாராட்டுக்கள். விளையாட்டு செய்திகள் மிகவும் அருமை. ப்ளு ஆர்ஜின் நிறுவன விண்கலன்களில் விண்வெளி உலா சென்ற பெண் பிரபலங்கள் என்ற செய்தி பெண்கள் சாதனை புரியும் மனதை அழகாக படம் பிடித்து காட்டியது. அவர்களுடைய உலா நல்லபடியாக அமைந்து வெற்றிகரமாக திரும்பி வர இறைவனை பிரார்த்திக்கிறேன் வெளிநாட்டினர் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று அமெரிக்க அரசின் உத்தரவும் பின்புலமும் என்று என்ன நடக்கிறது அமெரிக்காவில் என்று மிக அழகாக சொன்னது பாராட்டுக்குரியது. மெட்டு போட்டு இசையமைக்கும் ஒரு இசையமைப்பாளர் போல செய்திகளை அழகாக கொடுத்து எங்களை ஒரு செய்தி பிரியையாக மாற்றிய தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 


நன்றி

- உஷா முத்துராமன்