tamilnadu epaper

வாசகர் கடிதம் (கவி-வெண்ணிலவன்)-15.04.25

வாசகர் கடிதம் (கவி-வெண்ணிலவன்)-15.04.25


இன்றைய தமிழ்நாடு இ பேப்பரில் நலம் தரும் மருத்துவ பகுதியில் பேரிக்காயில் பயன்கள் பற்றிய கட்டுரை பேரிக்காய் எந்த அளவிற்கு உடல் நலத்திற்கு உகந்தது என்பதை தெளிவாக சொல்லுகிற பகுதியாக இருந்தது. சசிகலா திருமால் அவர்கள் எழுதிய சத்தமிடும் மௌனங்கள் தொடர் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது மிக அழகான காதல் கதையினை மிக நேர்த்தியாக கொண்டு செல்கிறார். இலக்கியா தீபக் காதல் வாசகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. இன்றைய எதலின் பன்முகம் பகுதியில் தமிழ் புத்தாண்டை பற்றிய கட்டுரைகள் புத்தாண்டை பற்றிய பலவிதமான தகவல்களை வழங்கியது. தம்பி அரவிந்தன் எழுதிய வாழ்வை சீராக்கும் சித்திரை தலைப்பில் ஆன கட்டுரை சித்திரை மாதத்தின் சிறப்புகளையும் பல்வேறு அறியாத பல தகவல்களை தன்னகத்தை கொண்டு சிறப்பாக இருந்தது.



-கவி-வெண்ணிலவன்

மணமேல்குடி