tamilnadu epaper

வாசகர் கடிதம் (கவி-வெண்ணிலவன்)-18.05.25

வாசகர் கடிதம் (கவி-வெண்ணிலவன்)-18.05.25


இன்றைய தமிழ்நாடு இ பேப்பரில் நலம் தரும் மருத்துவ பகுதியில் நல்லெண்ணெய் உடலுக்கு எவ்விதமான நன்மைகளை தருகிறது என்பதைப் பற்றிய கட்டுரை பெண்களுக்கு எந்த வகையில் ஆரோக்கியத்தை வழங்குவது என்பதை பற்றி கட்டுரை தெளிவாக உணர்த்தியது. முகில் தினகரனின் என் மணவாடி சிறுகதை உண்மையான பாசத்தின் பிரதிபலிப்பை மிக நேர்த்தியாக கண்முன்னே கொண்டு வந்து காட்டி விட்டார் அருமையான சிறுகதை படைத்த அவருக்கு பாராட்டுக்கள்.பறவை பறபற சிறுகதையும் நன்றாக இருந்தது.புதுக்கவிதை பக்கத்தில் இன்று வந்த கவிதைகள் அனைத்தும் சிறப்பாக இருந்தன.அதிலும் "காதல் கவிஞர்"வேலூர் முத்து ஆனந்தின் நான் சொல்வதெல்லாம் காதல் தலைப்பிலான கவிதை வித்தியாசமாய் மனசை கவர்வதாக இருந்தது.இளமையில் கல் என்றுதான் கேள்விபட்டு இருக்கிறேன்...ஆனால் இவரோ இளமையில் காதல் வரம் என்று காதலுக்கு புதிய இலக்கணம் வகுத்து காதலுக்கு மகுடம் சூட்டி உள்ளார்...காதல் மன்னனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஜோதிடம் அறிவோம் பகுதியில் வெளிவந்திருந்த கட்டுரைகள் அனைத்து ஆன்மீக தகவல்களை அள்ளித் தெளித்தார் போல் இருந்தது. இன்றைய தமிழ்நாடு இ பேப்பர் இன் இணைப்புகள் ஆன பன்முகம் இதில் சிறுகதை கட்டுரை என்று பல்வேறு தரப்பட்ட பல்சுவை களஞ்சியமாக மனதை தொடும் வகையில் அமைத்து அழகான புத்தகத்தை வழங்கிய நமது ஆசிரியர் குழுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.



கவி-வெண்ணிலவன்

மணமேல்குடி