வாட்சப்பில் இமேஜ் மூலம் புதிய மோசடி எச்சரிக்கை பழங்காலத்தில் இருந்தது போல் எந்த நவீன சாதனங்களையும்
பயன்படுத்தாமல் இருப்பதே மேல் என்ற நிலை வந்து விடும்போல் தெரிகிறது.
இன்ஸ்டாகிராம் பதின் வயதினர்க்கு புதிய கட்டுப்பாடு —நல்ல நடவடிக்கை.
வேலை முக்கியம் தான் அதே சமயத்தில் உடல் நலம் மிகமிக முக்கியம்
அவசியமான அறிவுரை.
சொன்னவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட தலைமைச் செயல் அலுவலர்(CEO)
எத்தனை வயது வித்தியாசத்தில் திருமணம் செய்யலாம்—இன்றைய இளைஞர்களும் இளைஞிகளும் படித்தறிய வேண்டிய கட்டுரை.
நேற்று சுண்டைக்காய் இன்று சுண்ட வத்தல் — சிறப்போ சிறப்பு.மறு பதிவாய் பலமுறை வலம் வருவதை நினைத்தால் சிரிப்போ சிரிப்பு.
மார்ச் மாதத்தில் மட்டும் திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் வருமானம் ரொக்கம்ரூ5 கோடி தங்கம்1 கிலோ வெள்ளி30 கிலோ
அந்நிய நாணயம் வேறு.
முருகன் பெருமையே பெருமை .மக்கள் பக்தி குறையவில்லை.
காதலெனும் பொன்வீதியில் பெண் கேட்டுப் போன மைத்துனருக்கு பெண் தர மறுத்த ருத்ரமூர்த்தியின் கோபம் சரியானதென நிரூபித்து விட்டான் . மதுவை அருந்தி தெருவில் வீழ்பவனுக்கு எப்படி பெண் கொடுப்பார். எமன் காலன் தூதனாய் மூவரும் கூட்டணி சேர்வது அந்தப் பெண் வாழ்க்கை எப்படி ஆகப்போகிறதோ? என்ற கழிவிரக்கத்தை கதாசிரியர் இப்போதே உருவாக்கி விட்டார்.
வாரிசு,உண்மைக் காதல் 2 குறுங் கதைகளுமே நல்ல கரு தான் . நான் சிறுவனாக இருக்கும்போது தான் 60 , 70 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி பாவாடை தாவணியில் பெண் பிள்ளைகளைக் காண முடிந்தது. படம் அருமை. பிறை நுதலில் நெற்றிச் சுட்டி சங்குக் கழுத்தில் அட்டிகை சங்கிலிகள் கைநிறைய கைகுலுங்க வளையல்கள்
தலைநிறைய பூ அஞ்சன மை எழுதிய கயல் விழிகள் புருவங்கள் பொட்டு வைத்த வட்ட முகம் கருங் கூந்தல் ரோசா நிறம் அப்பப்பா எப்படி ஒரு ஓவியம் இப்படி வரைய முடிகிறது.நம்ம ஓவியரை அடிச்சுக்கிட ஆளே கிடையாது.ஏஐ தொழில் நுட்பமோ? எதுவாக இருந்தாலென்ன பொருத்தமான படம் .
திரு.வே.கல்யாண்குமாரின் விருது
கவிதை ஏற்கனவே வந்தது தானே. நினைவில் நிற்கும் கவிதை அல்லவா.மறு பதிவை தவிர்த்து தினம் நாங்கள் அனுப்புகிற கவிதைகளை வெளியிட்டால் மகிழ்வோமே.நன்றி
-சிவ.சே. முத்துவிநாயகம்
திருநெல்வேலி